தமிழ்நாடு

“2 பெண் குழந்தைகளையும் கிணற்றில் வீசிவிட்டு தாயும் தற்கொலை”: சோகத்தில் மூழ்கிய ஊர்மக்கள் - நடந்தது என்ன?

கரூர் அருகே இன்று அதிகாலை பெண்ணொருவர் தனது 2 பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளி,  கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது.

“2 பெண் குழந்தைகளையும் கிணற்றில் வீசிவிட்டு தாயும் தற்கொலை”: சோகத்தில் மூழ்கிய ஊர்மக்கள் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் செம்பியநத்தம் அருகே உள்ள பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல். கரூரில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் டைலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சரண்யா (வயது 30). மகள் கனிஷ்கா (வயது 6). மற்றொரு மகள் புவிஷா (வயது 3).  சரண்யா நர்சிங் படிப்பு படித்துள்ளார்.

இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் சரண்யா தனது 2 பெண் குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி தானும் கிணற்றில்  குதித்துள்ளார். மூவரும் கிணற்றினுள் தண்ணீரில் மூழ்கினார். பின்னர் தகவல் அறிந்து அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் குஜிலியம்பாறை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சரண்யா மற்றும் புவிஷா ஆகிய இருவரின் ஊடலையும் மீட்டுள்ளனர். கனிஷ்காவின் உடலை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

இது பற்றிய தகவல் அறிந்த உடன் பாலவிடுதி போலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சரண்யா எதற்காக தற்கொலை செய்துகொண்டார்?  தனது 2 குழந்தைகளையும் ஏன் கிணற்றில் தள்ளினார்?  குடும்பத்தகராறு காரணமா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது பற்றி போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories