தமிழ்நாடு

இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; திருமணம் செய்து வைக்கச் சொல்லி தாயை திட்டித் தீர்த்த போதை காவலாளி!

வீட்டில் தனியாக இருந்த பட்டதாரி இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தனியார் நிறுவன காவலாளியை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; திருமணம் செய்து வைக்கச் சொல்லி தாயை திட்டித் தீர்த்த போதை காவலாளி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கொருக்குப்பேட்டை ஆரணி ரங்கன் தெருவைச் சேர்ந்தவர் உஷா. இவரது கணவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

ஒரு மகள் திருமணமாகி தன் கணவருடன் வாழ்ந்து வருவதாகவும் இரண்டாவது மகள் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் வசித்து வருவதாகவும் மூன்றாவது இளைய மகள் B.com படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; திருமணம் செய்து வைக்கச் சொல்லி தாயை திட்டித் தீர்த்த போதை காவலாளி!

நேற்று விடுமுறை என்பதால் வீட்டில் தனியாக இருந்த இளைய மகளை பக்கத்து வீட்டில் வசித்து வரும் சீனிவாசலு என்பவர் குடிபோதையில் தனது வீட்டில் புகுந்து எனது இளைய மகளை கைபிடித்து இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டதால் வீட்டில் அழுது கொண்டுள்ளார்.

இதனை கேள்விப்பட்டு சீனிவாசலு வீட்டிற்கு சென்று கேட்ட போது தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியும் தனது இளைய மகளை திருமணம் செய்து கொடுக்கும் படி கேட்டு உள்ளார். இது குறித்து சென்னை கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் தாய் உஷா புகார் அளித்திருக்கிறார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சீனிவாசலுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories