தமிழ்நாடு

தடம் புரண்ட அந்த்யோதையா ரயில்; ஊழியருக்கு எலும்பு முறிவு; தாம்பரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு!

தாம்பரம் ரயில்வே பணிமனையில் விரைவு ரயில் பெட்டியின் சக்கரம் தண்டவாளத்தில் தடம் புரண்டதில் ஊழியர் ஒருவருக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டதால் பரபரப்பு.

தடம் புரண்ட அந்த்யோதையா ரயில்; ஊழியருக்கு எலும்பு முறிவு; தாம்பரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையின் மூன்றாவது ரயில் முனையமாக உள்ள தாம்பரத்தில், பல்வேறு விரைவு ரயில்களை அங்குள்ள பணிமனையில் பராமரித்து அனுப்புவது வழக்கம்.

அவ்வகையில் நேற்று இரவு நாகர்கோவிலில் இருந்து சென்னை வந்த அந்த்யோதையா ரயில் பெட்டிகளை இன்று மதியம் பராமரிப்பு செய்திட மின்சாரம் மற்றும் பேட்டரியால் இயங்கும் எஞ்ஜின் மூலமாக குறைந்த வேகத்தில் பிட் லைன் பகுதிக்கு பின்புறமாக அழுத்த முற்பட்ட போது எஞ்ஜின் பிரேக் பிடிக்காமல் போனதால் அந்திதையா ரயில் பெட்டிகளை வேகமாக மோதியது.

தடம் புரண்ட அந்த்யோதையா ரயில்; ஊழியருக்கு எலும்பு முறிவு; தாம்பரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு!

இதில் ரயில்வே ஊழியர் பாயிண்ட் மேன் பிரபு என்பவர் கை எலும்பு முறிவு ஏற்பட்டது. அதே வேளையில் எஞ்ஜினில் இருந்து மூன்றாவது பெட்டியில் ஒரு ஜோடி சக்கரங்கள் தடம் புரண்டு தண்டவாளத்தில் இருந்து இறங்கியது.

இந்த தகவல் உயர் ரயில்வே அதிகாரிகளுக்கு தெரிந்தவுடன் நேரில் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் சிறப்பு ஹட்ராலிக் ஜாக்கிகள் கொண்டு அந்த சக்கரங்களை நிலை நிறுத்தம் பணியை மேற்கொண்டுள்ளனர்.

காயம் அடைந்த ரயில்வே ஊழியர் பிரபுவை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அடுத்து அடுத்து விரைவு ரயிகளை பராமரிப்பு செய்யும் ஒரு பிட் லைன் பயன் படுத்த முடியாமல் உள்ளது.

banner

Related Stories

Related Stories