தமிழ்நாடு

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிக பணத்தை இழந்த சென்னை இளைஞர் - விபரீத முடிவு எடுத்த சோகம்!

ஆன்லைன் ரிம்மி விளையாட்டில் அதிகப் பணத்தை இழந்ததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிக பணத்தை இழந்த சென்னை இளைஞர் - விபரீத முடிவு எடுத்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடுத்த தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருக்குக் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில், முருகன் தனது செல்போனில் ஆன்லைன் விளையாடி வந்துள்ளார். இதனால் நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் பணம் வாங்கி அதில் ரம்மி விளையாடி வந்துள்ளார்.

பின்னர், தொடர்ச்சியாக ஆன்லைன் விளையாடியதால் பணத்தை இழந்துள்ளார். இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்துவந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிக பணத்தை இழந்த சென்னை இளைஞர் - விபரீத முடிவு எடுத்த சோகம்!

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடி அதில் பணம் இழந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories