தமிழ்நாடு

”ஆதிக்க கலாச்சாரத்தை என்னால் தகர்த்தெரிய முடியவில்லை” - தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி உருக்கம்!

‘என்னை மன்னியுங்கள்’ - சக நீதிபதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி கடிதம்!

”ஆதிக்க கலாச்சாரத்தை என்னால் தகர்த்தெரிய முடியவில்லை” - தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி உருக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மேகாலயாவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட சென்னை தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி சக நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள என் குடும்பத்தினருக்கு என அவர் தொடங்கியுள்ள கடிதத்தில், தனிப்பட்ட முறையில் விடைபெறாமல் செல்வதற்காக மன்னிக்கும்படி என சக நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், தன்னுடைய நடவடிக்கைகள் யாரையும் புண்படுத்தி இருந்தால், அது தனிப்பட்ட முறையிலானது இல்லை என்றும், அது உயர் நீதிமன்ற நலனுக்கானதாகவே இருந்திருக்கும் என விளக்கம் அளித்துள்ளார்.

தன் மீதான சக நீதிபதிகளின் அளவுகடந்த அன்பினால் பூரித்து போயிருப்பதாகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். நாட்டிலேயே சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்தான் சிறப்பானவர்கள் என அனைத்து வழக்கறிஞர்களுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

திறமையான நிர்வாகத்தை மேற்கொள்ள உதவியாக இருந்த உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், தற்போது போலவே வெளிப்படைத்தன்மையுடன் நடவடிக்கைகளை தொடர வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

தனக்காக நீண்ட நேரம் காத்திருந்த நீதிமன்ற ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள சஞ்ஜீப் பானர்ஜி, இதுநாள் வரை அவர்கள் ஆதிக்க கலாச்சாரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்ததாகவும், அதை தன்னால் முழுமையாக தகர்த்தெறிய இயலவில்லை என வருத்ததை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்த அழகான மாநிலத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் நன்றிகடன் பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளதுடன், தனது சொந்த மாநிலம் என 11 மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்த மகிழ்ச்சியிலேயே அனைவரிடமிருந்தும் விடைபெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories