தமிழ்நாடு

இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி.. ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலிஸ்: நடந்தது என்ன?

மதுரை அண்ணாநகர் பகுதியில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ரவுடியை போலிஸார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி.. ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலிஸ்: நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள செண்பகத்தோட்டம் மீனவ சங்க கட்டிடம் அருகே தனியே நடந்துச் சென்ற பெண் ஒருவரை அப்பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி குருவி விஜய் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைத்த அப்பெண் கூச்சலிட்டப்படி அங்கிருந்து தப்பித்து அருகில் உள்ள வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார்.

அந்த பெண்ணை ரவுடி தொடர்ந்து தேடி வந்ததைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் காவல்துறை கட்டுப்பாட்டு அறிக்கை தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் போலிஸார் ரவுடி குருவி விஜய் விரட்டி பிடிக்க முயற்சித்தனர்.

அப்போது போலிஸாரை பார்த்ததும் குருவி விஜய் மற்றும் அவனது கூட்டாளிகள் போலிஸாரை தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து போலிஸார் குருவி விஜயை காலில் துப்பாக்கியால் சுட்டனர். காலில் குண்டடிபட்ட பட்ட குருவி விஜய் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து குருவி விஜய்யும், அவனது கூட்டாளிகளையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர். காலில் காயம் பட்ட குருவி விஜய் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலிஸாரின் இந்த உடனடி நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories