தமிழ்நாடு

பூஜை செய்வதாகச் சொல்லி 3 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்; 61 வயது ஆசாமிக்கு 25 ஆண்டுகள் சிறை விதிப்பு

3 சிறுமிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்த சம்பவத்தில் 61 வயது முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1.60 லட்சம் அபராதமும் விதிப்பு.

பூஜை செய்வதாகச் சொல்லி 3 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்; 61 வயது ஆசாமிக்கு 25 ஆண்டுகள் சிறை விதிப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கரூரில் பூஜை செய்வதாக கூறி வரவழைக்கப்பட்ட 3 சிறுமிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்த சம்பவத்தில் 61 வயது முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1.60 லட்சம் அபராதமும் விதித்து கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் கணபதி (61) . இவர் தனது வீட்டில் அவ்வப்போது பூஜைகள் நடத்துவது வழக்கம். அதே பகுதியில் தந்தையை இழந்த 14 , 15 , 17 வயதுடைய சகோதரிகளான 3 சிறுமிகள் கரூரில் டெக்ஸில் வேலை பார்க்கும் தாயின் பராமரிப்பில் இருந்துள்ளனர். கணபதி நடத்தும் பூஜைகளுக்குச் சிறுமிகள் 3 பேரும் அடிக்கடி சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சிறுமிகள் 3 பேரையும் கணபதி தனித்தனியே வரச்சொல்லி மயக்க மருந்து கலந்த தீர்த்தம், பொங்கல் ஆகியவற்றைக் கொடுத்துள்ளார். அப்போது அச்சிறுமிகளுக்குத் தனித்தனியே பலமுறை பாலியல் துன்புறுத்தல் தந்துள்ளார்.

இதுகுறித்து 3 சிறுமிகளும் தாயிடம் தெரிவித்ததையடுத்து சிறுமிகளின் தாய் வெங்கமேடு காவல் நிலையத்தில் கடந்த 2019ம் ஆண்டு புகார் அளித்தார் .

இதையடுத்து குழந்தைகளைப் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் ( போக்சோ ) சட்டம், பெண்கள் வன்கொடுமை, ஆபாசமாகத் திட்டுதல், கொலை மிரட்டல் ஆகிய 4 சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இவ்வழக்கில் நீதிபதி நசீமாபானு , கணபதிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1.60 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு இன்று வழங்கினார்.

banner

Related Stories

Related Stories