
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று முன் தினம்மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் 25 ஆண்டு காலமாக வசித்து வரும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த நரிக்குறவர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு பட்டா, வாக்காளர் அட்டை உள்ளிட்டவற்றை வழங்கி ரூ4.5கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இச்செயலை கேரளாவில் இருந்து வெளிவரும் புகழ்பெற்ற தொலைக்காட்சியான ‘மாத்ருபூமி’ தொலைக் காட்சி சிறப்புச் செய்தியாக தொகுத்துஒளிபரப்பியது.
இதுகுறித்து """"மாத்ருபூமி’’தொலைக்காட்சி ஒளிபரப்பிய சிறப்புசெய்தி வருமாறு:-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஸ்தலசயனப் பெருமாள் கோவிலில்அன்னதானம் சாப்பிட அனுமதிக்காத நரிக்குறவர்பெண்ணின் இல்லத்திற்குச்சென்று அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார்.(இச்செய்தியறிந்து அமைச்சர் சேகர்பாபு அதே கோவிலில்அப்பெண்மணியுடன் அருகில்அமர்ந்து சாப்பிட்ட செய்திகள்சமூக வலைதளங்களில்பரவியது குறிப்பிடத்தக்கது)
மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பழங்குடி இனத்தைச் சேர்ந்த நரிக்குறவர் இன மக்களைச் சந்தித்து, 81 குடும்பங்களுக்குபட்டாவோடு நிலம், ரூபாய் 4.53கோடி மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடங்கள் மற்றும்நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 21பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை, 88 நபர்களுக்கு கம்யூனிட்டி சர்டிபிகேட் வழங்கினார்.ஒடுக்கப்பட்ட மக்களைகைதூக்கி விடும் முதல்வர்!ஒடுக்கப்பட்ட (ஒதுக்கிவைக்கப்பட்ட) மக்கள் என்றுகருதப்பட்ட பழங்குடி இனமக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சந்தித்தது மட்டுமின்றி அவர்களின்இல்லங்களுக்கு நேரில் சென்றுநலம் விசாரித்துள்ளார்.
இது குறித்து மாமல்லபுரத்தில் வசிக்கும் பழங்குடி இனமக்கள் கூறுகையில், """"எங்கள் வாழ்க்கையிலேயே இதுபோன்ற மகிழ்ச்சிகரமானசம்பவம் இதுவரை நடந்ததேஇல்லை. இதுவெல்லாம்கனவாக இருக்குமோ? என்றுஎண்ணக் கூடிய வகையில்இந்த நிகழ்ச்சியை முதல்வர்அவர்கள் எங்களுக்கு செய்துக்கொடுத்திருக்கிறார்.’’- என்று நெகிழ்ச்சியுடன்உணர்வுப் பூர்வமாக கூறினர்.
மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் கோவிலில் இரண்டுவாரத்திற்கு முன்பு அங்கு நடைபெற்ற அன்னதானம் வழங்கும்நிகழ்வில், நரிக்குறவ இனத்தைச்சேர்ந்த அஸ்வினி என்ற பெண் கைக்குழந்தையுடன் சாப்பிட சென்றபோதுஅனுமதிக்கப்படவில்லை. அப்பெண்மணி மற்றும் நரிக்குறவர்களுடன்அமர்ந்து அமைச்சர் சேகர்பாபுஉணவருந்திய நிகழ்வு இன்னும்நம் நினைவில் இருந்து அகலாதநிலையில், முதல்வர் அவர்கள்,நரிக்குறவ இன மக்களை நேரில்சந்தித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் முதல்வர் அவர்கள் அம்மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றது மட்டுமின்றி,அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவும் உறுதி அளித்துள்ளார். இதன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கையால், தமிழகத்தில் சாதிக்கு அளிக்கும் முக்கியத்துவம் ஒழிந்து புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.இவ்வாறு மாத்ரூபூமி தொலைக்காட்சி சிறப்பு செய்தியில் ஒளிபரப்பியுள்ளது








