தமிழ்நாடு

“ஒரகடம் டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கில் தேடப்பட்ட மற்றொரு குற்றவாளி கைது”: அதிரடி நடவடிக்கை எடுத்த போலிஸ்!

ஒரகடம் டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கில் தேடப்பட்ட மற்றொரு முக்கிய குற்றவாளியை போலிஸார் கைது செய்தனர்.

“ஒரகடம் டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கில் தேடப்பட்ட மற்றொரு குற்றவாளி கைது”:  அதிரடி நடவடிக்கை எடுத்த போலிஸ்!
DIGI TEAM 1
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் உட்கோட்டம் ஒரகடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளர்களாக பணிபுரிந்துவந்த துளசிதாஸ் மற்றும் ராமு. இவர்களை கடந்த மாதம் 04ம் தேதி அன்று அடையாளம் தெரியாத நபர்கள் கொடூரமான முறையில் தாக்கியதில் துளசிதாஸ் சம்பவயிடத்திலேயே பலியானார் மற்றும் காயமடைந்த ராமு மருத்துவசிகிச்சை பெற்று வந்தார்.

இது சம்மந்தமாக ஒரகடம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யபட்டு கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வடக்கு மண்டல காவல்துறைத்தலைவர் சந்தோஷ்குமார் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா மற்றும் செல்போன் எண்களை வைத்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையில், கிடைக்கப்பெற்ற சிசிடிவி பதிவு மற்றும் அறிவியல் பூர்வமான தகவலின் அடிப்படையிலும் தனிப்படையினர் பீகார் மாநிலம் சென்று அம்மாநில காவல்துறையின் உதவியுடன் எதிரி உமேஷ்குமார் ( 25 ) த / பெ.மோகன்குமார், ஹவ்காரா கிராமம் கைமூர் மாவட்டம், பீகார் மாநிலம் என்பவரை கைது செய்து ஒரகடம காவல்நிலையம் அழைத்துவந்து இன்று உமேஷ்குமாரை விசாரணை செய்தனர்.

பின்னர் நீதிபதியின் உத்தரவின் பேரில் 15 நாட்கள் நீதி மன்ற காவலில் காஞ்சிபுரம் கிளை சிறையில் குற்றவாளி உமேஷ் குமார் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு எதிரியை கைது செய்த ஒரு கட்டம் காவல் உதவி ஆய்வாளர் தர்மலிங்கம் உள்ளிட்ட தனிப்படையினரை காவல் கண்காணிப்பாளர், டாக்டர் சுதாகர் வெகுவாக பாராட்டினார்கள்.

banner

Related Stories

Related Stories