தமிழ்நாடு

“18 நாட்களில் 82 கோடிக்கு விற்பனை” : ஆவின் பால் பொருட்கள் விற்பனையில் புதிய சாதனை படைத்த தி.மு.க அரசு!

ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் அதிமுக ஆட்சியின் போது 52 கோடியாக இருந்த விற்பனை தி.மு.க ஆட்சியில் 82 கோடியாக அதிகரித்துள்ளதாக பால் வளத்துறை அமைச்சர் ஆவடி.சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.

“18 நாட்களில் 82 கோடிக்கு விற்பனை” : ஆவின் பால் பொருட்கள் விற்பனையில் புதிய சாதனை படைத்த தி.மு.க அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் அதிமுக ஆட்சியின் போது 52 கோடியாக இருந்த விற்பனை தி.மு.க ஆட்சியில் 82 கோடியாக அதிகரித்துள்ளதாகவும், ஆவின் வரலாற்றில் ஒரே நாளில் 3.25 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை நடந்துள்ளதாக தமிழக பால் வளத்துறை அமைச்சர் ஆவடி.சா.மு.நாசர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் கொமக்கம்பேடு, சீத்தஞ்சேரி, நொச்சிலி திருத்தணி ஆகிய பகுதிகளில் சுமார் 3.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடங்களை கானொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கொமக்கம்பேடு பள்ளியை பால் வளத்துறை அமைச்சர் ஆவடி.சா.மு.நாசர் ஆய்வு செய்து மாணவர்களுக்கும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், “கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது கிடப்பில் போடப்பட்ட பள்ளி கட்டிடப்பணிகளை தி.மு.க ஆட்சியமைந்ததும் பணிகளை விரைந்து முடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிக்கிவிட்டு 5 மாத காலத்தில் சுமார் 3.50 கோடி மதிப்பீட்டில் 4 பள்ளிகளை திறந்து வைத்துள்ளார்.

தி.மு.க தேர்தல் வாக்குறுதியளித்தது போல் ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இதனால் அ.தி.மு.க ஆட்சியின் போது சில்லறை விலை 26 லட்சமாக இருந்தது தற்போது 27 லட்சத்து 60 ஆயிரம் லிட்டராக உயர்ந்துள்ளது. உற்பத்தியை பொறுத்தவரை கடந்த அ.தி.மு.க ஆட்சில் 36 லட்சமாக இருந்தது 5 மாதங்களில் 41 லட்சமாக உயர்ந்துள்ளது.

விற்பனை போக மீதமுள்ள பாலை கொண்டு பால்பொருட்களை தயார் செய்து விற்பனையானது, அ.தி.மு.க ஆட்சியில் 40 நாட்களில் 52 கோடியாக இருந்தது, இன்று அண்டை மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதாலும் கடந்த 18 நாட்களில் மட்டும் 82 கோடி ரூபாய் விற்பனையில் ஆவின் நிர்வாகம் சாதனை படைத்துள்ளது.

அதேபோல் தீப ஒளி திருநாளை முன்னிட்டு ஆவின் விற்பனை ஆவின் வரலாற்றிலேயே இது வரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 3.25 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. முதலமைச்சாரின் வழிகாட்டுதலினால் ஆவின் நிர்வாகம் விற்பனையிலும், உற்பத்தியிலும் சாதனை புரிந்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories