தமிழ்நாடு

”இது மக்களுக்கான அரசு: 10 ஆண்டுகள் கழித்து வளர்ச்சி பாதையை நோக்கி தமிழகம்” - தினகரன் நாளேடு தலையங்கம்!

10 ஆண்டுகளாக பின் தங்கியிருந்த தமிழகம், தற்போது வளர்ச்சி என்ற பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு தமிழக முதல்வரின் அயராத உழைப்பு தான் காரணம்.

”இது மக்களுக்கான அரசு: 10 ஆண்டுகள் கழித்து வளர்ச்சி பாதையை நோக்கி தமிழகம்” - தினகரன் நாளேடு தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு தடைகளை தகர்த்து, வளர்ச்சி என்ற இலக்கை தமிழகம் விரைவில் எட்டும் என ‘தினகரன்’ நாளேடு 2.11.2021 தேதியிட்ட இதழில் ‘மக்களுக்கான அரசு’ என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ளது!

அதுபற்றிய விவரம் வருமாறு:-

"தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் மூலம் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக துரித நடவடிக்கையால் தொற்றின் வேகம் தற்போது கட்டுக்குள் வந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக பின் தங்கியிருந்த தமிழகம், தற்போது வளர்ச்சி என்ற பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு தமிழக முதல்வரின் அயராத உழைப்பு தான் காரணம். மிக குறுகிய காலத்தில் வளர்ச்சி என்ற இலக்கை தமிழகம் எட்டும்.

முக்கியமாக, அனைத்து தரப்பு மக்களும் பயன்படும் வகையில் பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக அரசின் செயல்பாடுகளை மக்கள் பாராட்டி வரும் நிலையில், அதை பொறுத்து கொள்ள முடியாத சிலர், ‘‘தங்கள் இருப்பை காட்டி கொள்ள துளியளவு கூட ஆதாரம் இல்லாமல் பொய் குற்றச்சாட்டுகளை’’ தெரிவித்து வருகின்றனர். இதை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என்பதை அவர்கள் அழுத்தமாக புரிந்து கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடக்கவில்லை. இதனால் கற்றல் திறன் மற்றும் இடைவெளியும் ஏற்பட்டது. கல்வியில் பின்னடைவை மாணவர்கள் சந்தித்தால் அவர்களின் எதிர்காலம் பாதிக்க நேரிடும். முக்கியமாக, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகளில் தொய்வு ஏற்படும். இதனால் அறிவியலில் அடுத்தடுத்து முன்னேற்றம் குறைய வாய்ப்பு உள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்படுகிறது. 1 முதல் 8ம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு இருப்பது பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என அவர்களுக்காக புதுப்புது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கல்வி, வளர்ச்சி, அமைதி, விவசாயம் உள்ளிட்ட அனைத்திலும் தமிழகம் முன்னேற்றம் கண்டு வருகிறது. மழையால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. குற்றச்சாட்டு சொல்ல முடியாத அளவுக்கு அரசின் நடவடிக்கை சிறப்பாக இருப்பதை சில கட்சிகளால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேறி வருவதை அவர்கள் விரும்பவில்லையா?. பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி மக்களை திசை திருப்பும் முயற்சி நடந்து வருகிறது. மக்கள் தெளிவாக உள்ளனர். அவர்களை ஏமாற்ற முடியாது. அரசின் நடவடிக்கைக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு தடைகளை தகர்த்து, வளர்ச்சி என்ற இலக்கை தமிழகம் விரைவில் எட்டும்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories