தமிழ்நாடு

"ஆடு நனையுதேனு ஓநாய் அழுதமாதிரி இருக்கு அண்ணாமலையின் பேச்சு" : அமைச்சர் மனோ தங்கராஜ் சாடல்!

ஆடு நனைகிறது என ஓநாய் அழுவதைபோல் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் பேச்சு உள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

"ஆடு நனையுதேனு ஓநாய் அழுதமாதிரி இருக்கு அண்ணாமலையின் பேச்சு" : அமைச்சர் மனோ தங்கராஜ் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் நேற்று 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருவிதாங்கோடு அரசு நடுநிலைப் பள்ளிக்குச் சென்று பள்ளிக்கு வந்த மாணவர்களை இனிப்புகள் மற்றும் பூ கொடுத்து அமைச்சர் மனோ தங்கராஜ் வரவேற்றார்.

பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்துக்களுக்கு விரோதி தி.மு.க என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், "ஆடு நனைகிறது என ஓநாய் அழுவதைபோல் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் பேச்சு உள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் மற்றும் அனைத்து சாதியினரும் ஆலயத்திற்குள் நுழையலாம் என்ற தி.மு.கவின் நிலைப்பாடு பா.ஜ.கவுக்கு பிடிக்கவில்லை.

இதனால், மத துவேஷத்தை உருவாக்கி தி.மு.கவின் வாக்கு வங்கியை கைப்பற்ற நினைக்கிறது பா.ஜ.க. இந்த எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. அனைத்துத் துறைகளிலும் மின்னணு வசதி ஆக்கப்படுவதால் தகுதியான மக்களுக்கு அரசு சேவைகள் சென்றடைய வழிவகுக்கும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories