தமிழ்நாடு

மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த தீபஒளித் திருநாள் பரிசு.. நவம்பர் 5 அரசு விடுமுறை!

நவம்பர் 5ஆம் தேதி அரசு விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மக்களுக்கு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அளித்த தீபஒளித் திருநாள் பரிசு.. நவம்பர் 5 அரசு விடுமுறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தீபஒளித் திருநாளான நவம்பர் 4ஆம் தேதிக்கு அடுத்த நாள் அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தீபஒளித் திருநாளை முன்னிட்டு பணியாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று விழாவினை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாக, நவம்பர் 5 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு பலதரப்பிலிருந்தும் கோரிக்கைகள் அரசுக்கு வரப்பெற்றன.

அக்கோரிக்கைகளை அரசு கவனமுடன் பரிசீலித்து, தீபாவளிக்கு அடுத்த நாளான நவ.,05 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்தும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவ.,20 அன்று பணிநாளாக அறிவித்தும் உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories