தமிழ்நாடு

“குடும்பமாக சேர்ந்து இளம் பெண்ணை கொலை செய்த கொடூரம்” : தம்பதி உட்பட 5 பேர் கைது - நடந்தது என்ன?

நிலத் தகராறில் பெண்ணை கொலை செய்த கணவன், மனைவி உட்பட 5 பேரை போலிஸார் கைது செய்தனர்.

“குடும்பமாக சேர்ந்து இளம் பெண்ணை கொலை செய்த கொடூரம்” : தம்பதி உட்பட 5 பேர் கைது - நடந்தது என்ன?
DIGI TEAM 1
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொக்காலடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி ரேணுகா தேவி. ரேணுகாதேவியின் கணவரின் சகோதரருக்கும் கொக்காலடி ஊராட்சி அரகரை பகுதியைச் சேர்ந்த விமலா என்பவருக்கும் நிலத் தகராறு இருந்து வந்துள்ளது.

இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்று வந்துள்ளது. மேலும் விமலாவுக்கும் சாதகமாக நீதிமன்றத்தில் தீர்ப்பாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு ரேணுணாதேவியின் குடும்பத்தார் ஆர்ப்பாட்டம் நடந்த சென்றிருந்தனர்.

அந்த நேரத்தில், விமலா தரப்பினர் பிரச்சனைக்கு உள்ளான இடத்தில் வேலி வைத்து விவசாயப் பணிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் மாலையில் வந்த ரேணுகாதேவி, கணவர் ரவி, மற்றும் மைத்துனர்கள் கண்ணன் மனோ, ராஜா ஆகியோர் நிலத்தில் வேலி அமைக்கப்பட்டிருந்த பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து விமலாவிடம் தகராறு செய்துள்ளனர். இதில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து விமலாவை ரேணுகாதேவியின் உறவினர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். மேலும் அவரது மகன் அரவிந்தையும் பலமாகத் தாக்கியுள்ளனர்.

இதில் விமலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தால். பலத்த காயங்களுடன் இருந்த அரவிந்தனை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவலறிந்த திருத்துறைப்பூண்டி போஸிஸார் சம்பட இடத்திற்குச் சென்று விமலாவின் சடலத்தைக் கைப்பற்றி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரேணுகாதேவி அவரது கணவர் ரவி மற்றும் மைத்துனர்கள் மனோ, ராஜா கண்ணன் ஆகியோரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories