தமிழ்நாடு

“திராவிடம் என்றால் என்ன என்று கேட்கும் கோமாளிகளே.. இதுதான் திராவிடம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

"ஒரு காலத்தில் இன்னார்தான் படிக்கவேண்டும் இன்னார் படிக்கக்கூடாது என்று இருந்த நிலையை மாற்றிய ஆட்சி, திராவிட ஆட்சி" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

“திராவிடம் என்றால் என்ன என்று கேட்கும் கோமாளிகளே.. இதுதான் திராவிடம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தை விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கொரோனா நெருக்கடியில் உருவானதுதான் இல்லம் தேடிக் கல்வி திட்டம். இதற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வியில், தமிழகம் முன்னோடி என்ற நிலையில், இந்த திட்டம் மேலும் சிறப்பு சேர்க்கும்.

இந்த திட்டம், லட்சக்கணக்கான மாணவர்கள் வாழ்வில் ஒளியேற்றும். நேரடி வகுப்புகள் தரும் பயனை ஆன்லைன் கல்வி தராது. கொரோனா காலத்தில் மாணவர்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டனர். மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரி செய்ய பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மாநில சுயாட்சி மத நல்லிணக்கம் போன்ற பல செயல்களை செய்துவரும் நிலையில்தான் இல்லம் தேடி கல்வித் திட்டங்களையும் கொண்டு வருகிறோம். திராவிடம் என்றால் என்ன என்று சில கோமாளிகள் கேட்கிறார்கள். இதுபோன்ற திட்டங்கள்தான் திராவிடம்.

ஒரு காலத்தில் இன்னார்தான் படிக்க வேண்டும் இன்னார் படிக்கக்கூடாது என்று இருந்த நிலையை மாற்றிய ஆட்சி திராவிட ஆட்சி. ஏழை எளிய விளிம்புநிலை மக்கள் மற்றும் பட்டியலின பழங்குடியின மக்களுக்கு பலத் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது” என உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories