தமிழ்நாடு

”அரசுப்பள்ளிதானே என தாழ்வாக எண்ணிவிடாதீர்கள்” - பெற்றோர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய வேண்டுகோள்

அரசுப்பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள்.

”அரசுப்பள்ளிதானே என தாழ்வாக எண்ணிவிடாதீர்கள்” - பெற்றோர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய வேண்டுகோள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அரும்பாக்கம் மாதிரி மேல்நிலைப்பள்ளியில், எம்.கே.மோகன் அறக்கட்டளை பங்களிப்புடன் செயல்வழி கற்றல் முறை திட்டம் மற்றும் மழலையர் வகுப்புகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடக்கி வைத்தார்.

நிகழ்வில் அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன், தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவொளி, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், கிருத்திகா உதயநிதி, ஜனனி மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் விழாவில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செயல்வழிக் கற்றல் வகுப்பறைகள், மழலையர் வகுப்புகள் இன்று அரும்பாக்கம் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் துவக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளை மேம்படுத்த தனியாரின் பங்களிப்பு அவசியம் என்றும் தமிழகத்தில் 45,000-க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகள் உள்ளது அனைத்து பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் கிடையாது என கூறினார்.

பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை மழலையர் வகுப்பில் சேர்க்க தனியார் பள்ளிகளை நாடும் நிலையை மாற்றும் வகையில் இன்று அரசுப்பள்ளியில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி தானே என்று தாழ்வாக எண்ணிவிடக்கூடாது என்றும் அரசுப்பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.

பள்ளிக்கல்வித்துறையை மேம்படுத்த முதலமைச்சர் வேகமாக உழைத்துக்கொண்டிருக்கிறார் என்றும் அவருடன் சேர்ந்து நாங்களும் வேகமாக ஓடவேண்டி உள்ளது என கூறினார்.

"இல்லம் தேடிக் கல்வி" திட்டத்துக்கு இதுவரை 60,400 பேர் தன்னார்வலர்களாக செயல்பட விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர். அனைத்து இளைஞர்களும் தன்னார்வலர்களாக பதிவு செய்ய முன்வர வேண்டும்.

"அரசுப்பள்ளி என்பது பெருமையின் அடையாளம்" என்று மாற்றிக்காட்ட உழைத்து வருகிறோம்.

மேற்கண்டவாறு அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

banner

Related Stories

Related Stories