தமிழ்நாடு

“கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் வரிகள் உயர்த்தப்படுமா?”: அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுவது என்ன?

கரூர் நகராட்சியில் ரூ.1000 கோடி மதிப்பில் அடிப்படை கட்டமைப்பு பணிகள் நிறைவு செய்யப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்

“கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் வரிகள் உயர்த்தப்படுமா?”: அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுவது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கரூரில் ஒரு நாள் ஒரு வார்டு என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, “நகர்ப்புற தேர்தலில் கரூரை மாநகராட்சியாக தரம் உயர்த்தி விரைவில் அரசாணை வெளியாக உள்ளது.

மாநகராட்சி தேர்தலை சந்திக்க தயாராகி வரும் நிலையில், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இது போன்ற ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டு காலமாக கழிவு நீர் கால்வாய்கள் சுத்தப் படுத்தப்படாமல் கிடைக்கிறது. ஒரு புறம் அடைக்கபட்டும் ஒருபுறம் திறக்கப்படாமலும் என பல்வேறு குளறுபடிகள் கடந்த ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் இதற்காக ரூபாய் 1000 கோடி மதிப்பில் சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டு, முதலமைச்சரிடம் நிதிகளை பெற்று பணிகளை படிப்படியாக மேற்கொள்ள உள்ளோம்.

மாநகராட்சி இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் இருப்பவர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் போது, வரிகள் உயர்த்தப்படும் என வதந்திகளை பரப்பி வருகின்றனர். நிச்சயம் வரிகள் ஒரு பைசா உயர்த்தப்பட மாட்டாது.

பொதுவான அரசு வரிவிதிப்பு மட்டுமே மாநகராட்சி செயல்படுத்தும். அமராவதி ஆறு மாசடைவதற்கு துணை கால்வாயான இரட்டை வாய்க்காலில் கழிவு நீர் செல்வது காரணமாக, விரைவில் இரட்டைவாய்க்கால் முழுமையாக சீரமைக்கப்படும். அமராவதி ஆறு மாசு கலக்காமல் தூய்மை படுத்தப்படும்” என அவர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories