தமிழ்நாடு

‘மெட்டி ஒலி’ சீரியல் நடிகை திடீர் மரணம்.. அதிர்ச்சியில் சின்னத்திரை நடிகர்கள் !

'மெட்டி ஒலி' தொடர் நடிகை உமா மகேஷ்வரி உடல்நலக்குறைவால் காலமானார்.

‘மெட்டி ஒலி’ சீரியல் நடிகை திடீர் மரணம்.. அதிர்ச்சியில் சின்னத்திரை நடிகர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டுவரை கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஒளிபரப்பப்பட்ட 'மெட்டி ஒலி' தொடர் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட தொடராகும்.

இந்த தொடரைத் திருமுருகன் இயக்கினார். இதில் டெல்லி குமார், திருமுருகன், காவேரி, காயத்ரி, போஸ் வெங்கட், சஞ்சீவி, உமா மகேஸ்வரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்த தொடரின் மூலம் உமா மகேஸ்வரி சின்னத்திரையில் புகழ்பெற்றார்.

இந்த புகழைத் தொடர்ந்து 'ஒரு கதையின் கதை', 'மஞ்சள் மகிமை' போன்ற தொடர்களில் நடித்துள்ளார். மேலும் 'ஈ பார்கவி நிலையம்' என்ற மலையாளப்படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். கடந்த 13 வருடங்களாகத் திரையுலகில் இருந்துவரும் இவர் சில மாதங்களுக்கு முன்னால் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர், இதற்காகச் சிகிச்சை எடுத்துக் கொண்டு மஞ்சள் காமாலை நோயிலிருந்து குணமடைந்தார். இருந்தபோதும் மீண்டும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று அவர் திடீரென மரணமடைந்துள்ளார். இவரது மரணம் சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருக்கு நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories