தமிழ்நாடு

“ரூ.92000 பேசியல், ஹேர்டை.. ரூ.72 லட்சம் கொள்ளை பணத்தில் சொகுசாக வாழ்ந்த கொள்ளையன்” : சிக்கவைத்த CCTV!

தனியார் நிறுவனத்தில் ரூ.72 லட்சம் கொள்ளையடித்தவரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

“ரூ.92000 பேசியல், ஹேர்டை.. ரூ.72 லட்சம் கொள்ளை பணத்தில் சொகுசாக வாழ்ந்த கொள்ளையன்” : சிக்கவைத்த CCTV!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஆசிஷ் பன்சால். தொழிலதிபரான இவர் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஆந்திராவில் கார் பேட்டரிகளுக்கு அமிலம் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரின் தலைமை அலுவலகம் சென்னை ஹாரிங்டன் சாலையில் உள்ள வணிக வளாகத்தின் 4வது மாடியில் உள்ளது.

இந்நிலையில் கடந்த திங்களன்று அலுவலகத்தில் வேலைபார்க்கும் ஊழியர்கள் வழக்கம் போல் அலுவலகம் வந்துள்ளனர். அப்போது அலுவலக கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்து ரூ.75 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து அலுவலக மேலாளர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அங்கு வந்த போலிஸார் அலுவலகத்திலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் கொள்ளையன் தி.நகரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கி இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

பின்னர் அங்கு சென்ற போலிஸார் கொள்ளையனைப் பிடித்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் என்பதும் 1990ல் இருந்து சென்னையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

“ரூ.92000 பேசியல், ஹேர்டை.. ரூ.72 லட்சம் கொள்ளை பணத்தில் சொகுசாக வாழ்ந்த கொள்ளையன்” : சிக்கவைத்த CCTV!

மேலும் இவர் மீது சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் 21 திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோல், 1992ம் ஆண்டு இவரைக் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பின்னர் சிறையிலிருந்து வெளியேவந்து பிறகு சென்னைவிட்டு மற்ற மாவட்டங்களில் கொள்ளை அடித்து வந்துள்ளார். மீண்டும் கடந்த மாதம் சென்னைக்கு வந்த இவர் எங்குக் கொள்ளையடிக்கலாம் என பல்வேறு பகுதிகளுக்குச் சென்று நோட்டமிட்டு வந்துள்ளார்.

இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 9 ம் தேதி சேத்துப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரூ. 75 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளார். பின்னர் ஜி.ஆர்.டி சொகுசு விடுதியில் அரை எடுத்த தங்கியுள்ளார். கொள்ளையடித்த பணத்தில் ஈ.சி.ஆர் சாலையில் ரூ. 55 லட்சத்திற்கு ஒரு வீட்டை பேரம் பேசியுள்ளார்.

மேலும் கொள்ளையடித்த பணத்தில் 3 நாட்களில் விலை உயர்ந்த உணவு, மதுபானங்கள் என ரூ. 5.50 லட்சம் செலவு செய்து சொகுசாக வாழ்ந்து வந்துள்ளார். மேலும் ரூ.92 ஆயிரத்திற்கு பேசியல், ஹேர் டை செய்துள்ளார்.

“பெரிய தொகையை கொள்ளையடித்து விட்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என திட்டம் போட்டு அதை நிறைவேற்றித் தப்பிக்கும் போது வந்து பிடிச்சிட்டிங்களே” என போலிஸாரிடம் கொள்ளையன் கூறியதை கேட்டு சககாவலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து கொள்ளையனிடமிருந்த ரூ. 60 லட்சம் பணத்தை போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவரது இரண்டு வங்கியில் இருந்து 6 லட்சம் ரூபாய் பணத்தையும் முடக்கியுள்ளனர். கொள்ளையன் பாண்டுரங்கனைக் கைது செய்து போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories