தமிழ்நாடு

“மாணவர்களுடன் பெற்றோர்களும் வகுப்பில் அமரலாம்” : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறிய முக்கிய தகவல்!

பள்ளிகளில் 1ம் வகுப்பு மாணவர்களுடன் பெற்றோர்களும் அமர அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

“மாணவர்களுடன் பெற்றோர்களும் வகுப்பில் அமரலாம்” : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறிய முக்கிய தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் நவம்பர் 1ம் தேதியிலிருந்து பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிதாகப் பள்ளிக்கு வரும் 1ம் வகுப்பு மாணவர்களுடன் பெற்றோரும் அமர அனுமதி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருச்சியில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அவர், “நவம்பர் 1ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் பள்ளிகளுக்கு வர உள்ளனர். பள்ளிக்கு வரும் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வளவு நேரம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியாது.

இதனால் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்து வந்து அவர்களுடன் சேர்ந்து அமர்ந்து கொள்ளலாம். நீண்ட நேரம் முகக்கவசம் அணிந்து குழந்தைகள் உட்கார முடியவில்லை என்றால் பெற்றோர்களை அவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடலாம். மாணவர்களின் கல்வி நலனுக்காகவே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் நேரடி வகுப்புகளுக்கு வருவது கட்டாயமில்லை” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories