தமிழ்நாடு

19 ஊரில் ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படாமல் காப்பாற்றிய செவிலியர் : ஊர் கூடி நடத்திய பாராட்டு விழா !

தன்னைப்பற்றி சிறிதளவும் கவலைப்படாமல் ஊர் மக்களுக்காக சூறாவளியாய் சுழன்று உழைத்த செவிலியர் கவிதாவை கவுரவிக்க அனைத்து கிராமத்தினரும் முடிவெடுத்திருக்கிறார்கள்.

19 ஊரில் ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படாமல் காப்பாற்றிய செவிலியர் : ஊர் கூடி நடத்திய பாராட்டு விழா !
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தீவிரமாக கொரோனா பரவிய போதும் எந்த உயிரிழப்பும் ஏற்படாமல் 19 கிராம மக்களை ஒற்றையாளாக காப்பாற்றிய செவிலியருக்கு பாராட்டு விழா நடத்தி சிறப்பித்திருக்கிறார்கள் கிராம மக்கள்.

ராமநாதபுரம் திருவாடனை அருகே திருவெற்றியூர் ஊராட்சியை ஒட்டியுள்ளது 19 கிராமங்கள். அங்கு உள்ள அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில்தான் கிராம செவிலியராக பணியாற்றி வருகிறார் கவிதா.

கொரோனா பரவல் குறித்த எந்தவித விழிப்புணர்வும் இல்லாமல் அச்சத்தில் ஆழ்ந்திருந்த திருவெற்றியூர் ஊராட்சியை உள்ளடக்கிய கிராம மக்களுக்காக களத்தில் இறங்கி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தன்னந்தனியாக மேற்கொண்டிருக்கிறார் செவிலியர் கவிதா.

19 ஊரில் ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படாமல் காப்பாற்றிய செவிலியர் : ஊர் கூடி நடத்திய பாராட்டு விழா !

19 கிராமங்களில் உள்ள அனைத்து மக்களிடத்திலும் கொரோனா தடுப்பு முறைகளை கொண்டு சேர்த்து, ஆரோக்கியமாக இருப்பதற்காக கபசுர குடிநீர், மருந்து மாத்திரைகள் என மருத்துவ உதவிகளையும் செய்து கொடுத்ததோடு மக்கள் அனைவரையும் அரவணைத்து ஆறுதலாகவும் இருந்து வருகிறார்.

இதுபோக, சுற்றுப்புற தூய்மை குறித்த விழிப்புணர்வையும் செவிலியர் கவிதா ஏற்படுத்தியதால் திருவெற்றியூர் ஊராட்சியில் உள்ள எந்த கிராமங்களிலும் கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்பதே அவரது அயராத உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

ஆகவே தன்னைப்பற்றி சிறிதளவும் கவலைப்படாமல் ஊர் மக்களுக்காக சூறாவளியாய் சுழன்று உழைத்த செவிலியர் கவிதாவை கவுரவிக்க அனைத்து கிராமத்தினரும் முடிவெடுத்திருக்கிறார்கள். இது தொடர்பாக செவிலியர் கவிதாவிடம் தெரிவிக்க அவர் முதல் மறுத்திருக்கிறார். பின்னர் மக்களின் வற்புறுத்தலால் ஏற்றுக்கொண்டுள்ளார்.

19 ஊரில் ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படாமல் காப்பாற்றிய செவிலியர் : ஊர் கூடி நடத்திய பாராட்டு விழா !

இதனையடுத்து, 19 கிராமத்தைச் சேர்ந்த முக்கிய நபர்கள் மட்டுமே உள்ளடக்கி முறையான கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி செவிலியர் கவிதாவுக்கு பாராட்டு விழா நடத்தி தங்களது நன்றியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மேலும் ‘மக்கள் சேவகி கவிதா’ என்ற விருதையும் கிராம மக்கள் செவிலியருக்கு வழங்கியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவெற்றியூர் ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள் தனக்கு விருது வழங்கியது காலம் முழுக்க அவர்களுக்காகவே உழைக்க வேண்டும் என்று முடிவெடுத்திருப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார் செவிலியர் கவிதா. தொடர்ந்து பேசிய அவர், அதே ஊராட்சியைச் சேர்ந்த கள்ளிக்குடியைச் சேர்ந்தவராக இருந்தாலும் மற்ற கிராமத்து மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தால் அங்கன்வாடியில் பணியாற்றிய பிறகு செவிலியர் பணிக்கு வந்திருக்கிறேன்.

13 ஆயிரம் பேர் வாழும் இந்த 19 கிராமங்களில் உள்ள அனைவரிடத்திலும் அண்ணா, அக்கா, அம்மா, தாத்தா என சொந்த உறவுகளை கவனிப்பது போலவே இயல்பாக பழகி பேசுவது வழக்கம். ஆகையால் அவர்களுக்கு தேவையான மருத்துவம் சார்ந்த அனைத்து உதவிகளையும் என்னால் முடிந்ததை செய்து வருகிறேன். பல நாட்களுக்கு முன்பே இது போன்று விழா நடத்த வேண்டும் என கிராமத்தினர் கேட்டனர். நான் மறுத்தும் அதை ஏற்காமல் வற்புறுத்தி இதை செய்துக் காட்டிவிட்டார்கள் என செவிலியர் கவிதா நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories