தமிழ்நாடு

“அ.தி.மு.க ஆட்சியால்தான் இந்த நிலைமை” : அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு!

அ.தி.மு.க ஆட்சியில் மின் தேவையில் 22% மட்டுமே சொந்தமாக உற்பத்தி செய்யப்பட்டது என்றும், மீதமுள்ளவை அதிக விலைக்கு தனியாரிடம் வாங்கப்பட்டது என்றும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

“அ.தி.மு.க ஆட்சியால்தான் இந்த நிலைமை” : அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் மின் தேவையில் 22% மட்டுமே சொந்தமாக உற்பத்தி செய்யப்பட்டது என்றும், மீதமுள்ளவை அதிக விலைக்கு தனியாரிடம் வாங்கப்பட்டது என்றும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூர் கொளந்தாகவுண்டனூரில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் தொடர் மழையால் சேதமடைந்திருப்பதை மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று பார்வையிட்டார்.

அங்கு குடியிருந்தோர் பசுபதிபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும், முதலமைச்சரிடம் பேசி இந்த 112 குடும்பங்களுக்கு புதிதாக வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, “தமிழ்நாட்டின் ஒருநாள் மின் தேவை 16,000 மெகாவாட். இதில் வெறும் 22 சதவீதம் மட்டுமே கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சொந்தமாக உற்பத்தி செய்யப்பட்டது.

பற்றாக்குறைக்கு ஒன்றிய அரசிடம் இருந்தும், தனியாரிடம் இருந்தும் வாங்கிப் பயன்படுத்தினர். தற்போது, மின் உற்பத்திக்கு ஆகும் செலவைக் குறைத்து, அதிக விலை கொடுத்து தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

அனல் மின் உற்பத்தியை அதிகரிக்க கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஒடிசாவில் இருந்து நிலக்கரி வாங்கப்படுகிறது. நிலக்கரியை வாங்கி இங்கு உற்பத்தி செய்வதற்கு பதிலாக, அங்கேயே மின் உற்பத்தி செய்து மின்சாரம் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 1 யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மிச்சமாகிறது.

கடந்த 2006ல் தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மின் திட்டங்கள் கடந்த 10 ஆண்டுகள் நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை மறு ஆய்வு செய்து நிறைவேற்ற முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார்.

அதேபோல, மின் உற்பத்திக்கு ஆகும் செலவை குறைத்து, அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதை தடுக்கவும், மின்சாரத் துறையில் புதிய கட்டமைப்புகளை ஏற்படுத்தி சீர் செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories