தமிழ்நாடு

ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரைப் பயன்படுத்தி ரூ 44 லட்சம் மோசடி... குற்றவாளியைக் கைது செய்த போலிஸ்!

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி செய்த நபரை போலிஸார் கைது செய்தனர்.

ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரைப் பயன்படுத்தி ரூ 44 லட்சம் மோசடி... குற்றவாளியைக் கைது செய்த போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர் மதனகோபால். இவரைக் கமலக்கண்ணன் என்பவர் சந்தித்து தனது மகள்களுக்கு அரசு வேலை வாங்கித்தர உதவ முடியுமா என கேட்டுள்ளார்.

அப்போது, கமலக்கண்ணன், முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய உறவினர் என்றும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கமலக்கண்ணனிடம் ரூ.44 லட்சம் வாங்கியுள்ளார்.

ஆனால், சொன்னபடி மதனகோபால் அரசு வேலை வாங்கித் தரவில்லை. இதனால் கொடுத்த பணத்தை கமலக்கண்ணன் திருப்பி கேட்டுள்ளார். இதற்குப் பணம் தரமுடியாது என மதனகோபால் தெரிவித்துள்ளார்.

பின்னர் இது குறித்து கமலக்கண்ணன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் மதனகோபாலை கைது செய்து அவரிடமிருந்த கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories