தமிழ்நாடு

சைக்கிள் நிறுத்துவதில் தகராறு.. சாதி மோதலாக உருமாறி தாக்கிக்கொண்ட மாணவர்கள் : TC கொடுத்த பள்ளி நிர்வாகம்!

நெல்லை பாளையங்கோட்டை தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சைக்கிள் நிறுத்துவதில் தகராறு.. சாதி மோதலாக உருமாறி தாக்கிக்கொண்ட மாணவர்கள் : TC கொடுத்த பள்ளி நிர்வாகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கிடையே சைக்கிள் நிறுத்துவது தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சக மாணவர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறித் தாக்கிக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலிஸார் உடனே பள்ளிக்கு விரைந்து வந்தனர்.

பிறகு தரகாறில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாணவர்களை தடுத்து நிறுத்தி, காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி, இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என்றும் மீறி ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறி எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்துள்ளனர்.

இதையடுத்து தகராறில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் மாற்றுச் சான்றிதழ் கொடுத்து நடவடிக்கை எடுத்துள்ளது.

பள்ளி மாணவர்கள் தாக்கிக் கொள்ளும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்பட்டுள்ளது. மேலும் சைக்கிள் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறாக இருந்தாலும் இரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையே இருந்த பகை காரணமாகவே இந்த மோதல் சம்பவம் நடந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories