தமிழ்நாடு

பூஸ்ட், ஹார்லிக்ஸ் டப்பாக்களை திருடும் பெண்கள்... cctv காட்சியை கொண்டு வலைவீசி தேடும் போலிஸ்!

டிபார்ட்மென்ட் ஸ்டோரில் விலை உயர்ந்த பொருட்களை திருடிய 2 பெண்களை சிசிடிவி காட்சி உதவியுடன் போலிஸார் தேடி வருகின்றனர்.

பூஸ்ட், ஹார்லிக்ஸ் டப்பாக்களை திருடும் பெண்கள்... cctv காட்சியை கொண்டு வலைவீசி தேடும் போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

புதுச்சேரியில் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் விலை உயர்ந்த பொருட்களை திருடிய 2 பெண்களை சிசிடிவி காட்சி உதவியுடன் போலிஸார் தேடி வருகின்றனர்.

சிசிடிவி இருப்பது தெரியாமல், யாருமில்லை என நினைத்து திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபட்டு போலிஸில் சிக்குவது தொடர்ந்து வருகிறது. புதுச்சேரியில் அப்படி சிசிடிவி கேமரா இருப்பது தெரியாமல் திருடிய பெண்களை போலிஸார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி - கடலூர் சாலையில் உள்ள நயினார் மண்டபம் பகுதியில் அமைந்துள்ள டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஒன்றில் பொருட்களை கணக்கெடுக்கும்போது விலையுயர்ந்த பொருட்களான நெய், ஹார்லிக்ஸ், பூஸ்ட் உள்ளிட்டவை காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கடைப் பணியாளர்கள் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கடந்த 29ஆம் தேதி இரவு 8 மணி அளவில் கடைக்குள் வந்த இரு பெண்கள் ஹார்லிக்ஸ் மற்றும் பூஸ்ட் டப்பாக்களை தங்களது சேலை முந்தானையில் மறைத்து எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு கடையின் உரிமையாளர் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை கொண்டு கடையில் திருடும் பெண்களை போலிஸார் தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories