தமிழ்நாடு

தீபாவளி சீட்டு போடும் மக்களே உஷார்: பணத்தையும் பெற்று நகைகளையும் அள்ளிச்சென்ற உரிமையாளர்கள் மீது புகார்!

தீபாவளி நகை சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த நகைக்கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.

தீபாவளி சீட்டு போடும் மக்களே உஷார்: பணத்தையும் பெற்று நகைகளையும் அள்ளிச்சென்ற உரிமையாளர்கள் மீது புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை மயிலாப்பூர் பஜார் ரோடு பகுதியில் உள்ள ரமேஷ் ஜுவல்லரியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாதந்தோறும் சீட்டு கட்டி அதன் மூலம் நகை பெற்றுக்கொள்ளும் திட்டத்தின் கீழ் 400க்கும் மேற்பட்டோர் பல கோடி ரூபாயை ஏமாற்றி உள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தீபாவளியை முன்னிட்டு மாதம் 3 ஆயிரம் ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை தவணை செலுத்தும் திட்டத்தின் கீழ் அப்பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்கள் இரண்டு வருடங்களாக பணம் செலுத்தி வருகின்றனர்.

கட்டிய தொகைக்கு ஏற்ப நகையை பெற்றுக்கொள்ளும் திட்டத்தின்கீழ் பணம் கட்டி உள்ளனர். இந்த சீட்டு முடியும் நேரத்தில் நேரடியாகச் சென்று நகையை கேட்கும்பொழுது ரமேஷ் ஜூவல்லெரின் உரிமையாளர் ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தாருடன் கடையில் இருக்கும் நகைகளை அனைத்தையும் எடுத்து, இடத்தை காலி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.

இது குறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகையால் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து காவல் ஆணையர் அவர்களை சந்தித்து நாங்கள் ஏமாற்றப்பட்டு இழந்த பணத்தை திரும்பப் பெற்றுத் தருமாறு மனு அளித்துள்ளோம் என பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories