தமிழ்நாடு

அ.தி.மு.க ஆட்சியில் இருமடங்காக அதிகரித்த சிறார் குற்றங்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்டை வெளியிட்ட NCRB!

கடந்த 5 ஆண்டுகளில் சிறார் குற்றவாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளதாக அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது.

அ.தி.மு.க ஆட்சியில் இருமடங்காக அதிகரித்த சிறார் குற்றங்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்டை வெளியிட்ட NCRB!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் சிறார் குற்றவாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளதாக அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் முந்தைய அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள், கொடூர குற்றங்கள் மலிந்து கிடந்தது கண்கூடு. அதேபோல, சிறார் குற்றங்களும் அதிகம் நிகழ்ந்ததாக என்சிஆர்பி அறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் கொலைக் குற்றங்களில் குற்றம்சாட்டப்படும் சிறார்கள் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தெரிவித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து 2020-ம் ஆண்டுவரை ஒவ்வொரு ஆண்டும் கொலைக் குற்றத்தில் ஈடுபடும் சிறார்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டில் 48 கொலைக் குற்றங்களில் சிறார்கள் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் 2017-ம் ஆண்டில் 53 கொலைக் குற்றங்களாகவும், 2018-ம் ஆண்டில் 75 ஆகவும், 2019-ம் ஆண்டில் 92 ஆகவும், 2020-ம் ஆண்டில் 104 குற்றங்களாகவும் அதிகரித்துள்ளது.

2016-ஆம் ஆண்டில் 1,603 கொலைகளில் 48 கொலைக் குற்றங்கள் அதாவது 3 சதவீதம் சிறார்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். இது படிப்படியாக அதிகரித்து 2020-ம் ஆண்டில் 1,661 கொலைகளில் 104 குற்றங்களில் அதாவது 6.3% குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

தேசிய அளவில் கணக்கிட்டால் கொலைக் குற்றங்களில் சிறார்கள் குற்றம் சாட்டப்படும் அளவு கடந்த 2016-ம் ஆண்டில் இருந்ததில் இருந்து 2020-ம் ஆண்டு வரை குறைந்து பின்னர் சற்று அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் கொலைக் குற்றங்களில் சிறார்கள் குற்றம்சாட்டப்படும் அளவு கடந்த 5 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னை, மதுரை, திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான சிறார் குற்றவாளிகளுடன் அதிக எண்ணிக்கையிலான கொலைகள் பதிவாகியுள்ளன.

banner

Related Stories

Related Stories