தமிழ்நாடு

“Mr.எடப்பாடி நீங்கள் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கினீர்கள்?” - கோபப்பட்ட அமைச்சர்!

அ.தி.மு.க ஆட்சியில் உருவாக்கிய வேலைவாய்ப்புகள் என்னவென அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

“Mr.எடப்பாடி நீங்கள் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கினீர்கள்?” - கோபப்பட்ட அமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அ.தி.மு.க ஆட்சியில், தி.மு.கவினர் மீது வழக்குப் பதிவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கடந்த 4 மாதங்களில் தி.மு.க ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும், அ.தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைதான் திறந்துவைப்பதாகவும் ஒரு பொய்யான குற்றச்சாட்டை வலிந்து மக்கள் மனதில் திணிக்க முயன்றுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அடிப்படையான சில உண்மைகளை மறைத்துப் பேசினாலும், தி.மு.க ஆட்சியைப் பொறுத்தவரை தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 505 தேர்தல் வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றுவோம் என்று தமிழ்நாட்டு மக்கள் உறுதியாக நம்புகிறார்கள். எனவே உண்மையை மறைக்க எடப்பாடி முயற்சிக்கிறார்.

மேலும் தி.மு.க ஆட்சியில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளையும் இந்த அரசு சிறப்பாக கையாண்டு வருகிறது. மேலும், முதலமைச்சர் தலைமையில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் எல்லா வகையான தகவலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 2,120 கோடி ரூபாய் மதிப்பிலான 24 திட்டங்கள் மூலம் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏற்றுமதி கொள்கைகளை நாங்கள் வெளியிட்டுள்ளோம். ஆனால் எடப்பாடி ஆட்சியில் அப்படி எந்தவொரு கொள்கையும் வெளியிடப்படவில்லை.

ஆனால் எடப்பாடி பழனிசாமி ஏதோ பொத்தாம்பொதுவாக அ.தி.மு.க ஆட்சியில் இருந்த தொழில் முதலீட்டு திட்டங்களை தொடங்குவதாக கூறுகிறார். இது வெறும் பொய்” என தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது, “எடப்பாடி பழனிசாமி, நீங்கள் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கினீர்கள். அ.தி.மு.க ஆட்சியில் வேலைவாய்ப்புக்கு எடுத்த நடவடிக்கை என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories