தமிழ்நாடு

7.5% இடஒதுக்கீட்டின் கீழ் எவரெல்லாம் B.E, B.Tech-க்கு விண்ணப்பிக்கலாம்? -தெளிவுபடுத்திய அமைச்சர் பொன்முடி

விடுபட்ட மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கும் பட்சத்தில் கண்டிப்பாக கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெளிவுபடுத்தியுள்ளார்.

7.5% இடஒதுக்கீட்டின் கீழ் எவரெல்லாம் B.E, B.Tech-க்கு விண்ணப்பிக்கலாம்? -தெளிவுபடுத்திய அமைச்சர் பொன்முடி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தவர்கள்தான் 7.5% இட ஒதுக்கீடு கீழ் பயில முடியும் என்றும், விடுபட்ட மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கும் பட்சத்தில் கண்டிப்பாக கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெளிவுபடுத்தியுள்ளார்.

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வுக்கு மதிப்பெண்கள் வெளியிடப்பட்டு, சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு நேற்று கவுன்சிலிங் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% சிறப்பு ஒதுக்கீடு கீழ் கலந்தாய்வு நேற்று துவங்கி 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தவர்கள்தான் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் பயில முடியும் என்ற அவர், அந்த அடிப்படையில் மொத்தம் 22,133 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும், இதில் 15,660 தகுதியுள்ள விண்ணப்பங்கள் என்று கூறினார்.

7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 11,000 மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது என்ற அவர், மாணவர்கள் விருப்பப்பட்ட கல்லூரியில் பயில்வதில்தான் மாற்றம் ஏற்படுமே தவிர, மற்றபடி விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்கும் என்றார்.

கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர் என குறிப்பிட தவறியிருந்தால் அவர்கள் சென்னை, திருநெல்வேலியில் நேரில் சென்று முறையிடலாம் என்றும், இதற்காக மொத்தம் 51 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், அதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறினார்.

கலந்தாய்வுக்கு நேற்று மட்டும் 100 பேருக்கு நேரடியாக வர வாய்ப்பு கொடுக்கப்பட்டு, அதில் 73 பேருக்கு இடம் கிடைத்துள்ளது என்ற அவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் 20, அரசு பொறியியல் கல்லூரியில் 9, சுயநிலை பொறியியல் கல்லூரியில் 34 என மொத்தம் நேற்று 73 மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது என்று கல்லூரி வாரியாக விளக்கினார்.

ஆதிதிராவிடர், நகராட்சி பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், சமூக பாதுகாப்பு பள்ளிகள் போன்றவை அரசு பள்ளிகள் என கருதப்பட்டு இதில் படித்த மாணவர்களும் 7.5% கீழ் விண்ணப்பிக்கலாம் என்ற அவர், தமிழக முதலமைச்சர் சமூக நீதி இட ஒதுக்கீட்டை கண்காணிக்க குழு அமைத்து அறிவித்திருக்கிறார். சமூக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது முறையாக நடைபெறும் என்றார்.

banner

Related Stories

Related Stories