தமிழ்நாடு

”இனி புகார் வந்தால் உடனடி நடவடிக்கை” - டாஸ்மாக் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!

தமிழகம் முழுவதும் 724 பார்களுக்கு இதுவரை சீல் வைக்கப்படுள்ளன என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

”இனி புகார் வந்தால் உடனடி நடவடிக்கை” - டாஸ்மாக் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கல்வி நிலையங்கள் அருகே டாஸ்மாக் கடைகளை அகற்றுவது தொடர்பாக புகார் வந்தால் உடனடியாக தீர்வு எட்டப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார்.

சென்னை எழும்பூர் சி.எம்.டி.ஏ அலுவலகத்தில் டாஸ்மாக் மாவட்ட மற்றும் மண்டல மேலாளர்கள் உடன் மின், கலால் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,

பல்வேறு கால கட்டங்களில் ஆய்வுகளை மேற்கொண்ட போது இதுவரை 724 மதுபான பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தினை தவிர கூடுதல் நேரத்தில் மது கடைகள் திறந்து வைக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது

கூடுதல் விலைக்கு மது விற்றால் அவர்கள் மீது துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறிய அவர், வருவாய் ஈட்டுவது நோக்கம் அல்ல. அரசுக்கு நல்ல பெயர் உருவாக்க வேண்டும் என்பதே நோக்கம் என்றார்.

எந்த கடைகளில் கூடுதல் விலைக்கு விற்றாலும் அதற்கு அந்த மாவட்ட மேற்பார்வையாளர்தான் பொறுப்பு என்ற அவர், அனைத்து மது கடைகளுக்கும் முன்னால் விலை பட்டியல் வைக்கப்படும். அதற்கு மேலாக விற்கப்பட்டால் அந்த கடையின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வரக்கூடிய காலங்களில் என்னன்ன குறைபாடுகள் உள்ளதோ அதனை இனி வரக்கூடிய ஆய்வு கூட்டங்களில் ஆலோசிப்போம் என்று கூறிய அவர், பள்ளி, கல்லூரி போன்ற இடங்களுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வரக்கூடிய காலங்களில் நிர்வாகத்தினை எப்படி செயல்படுத்துவது என்று முதலமைச்சர் எங்களுக்கு கூறுவார். பொதுமக்களிடம் இருந்து வரும் புகாருக்கு அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், இனி வரக்கூடிய காலங்களில் இது போன்ற புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க கூடும் என்றார்.

banner

Related Stories

Related Stories