தமிழ்நாடு

ஒரு வருடமாக டிமிக்கி கொடுத்த செயின் பறிப்பு கொள்ளையன்... போலிஸார் பொறிவைத்துப் பிடித்தது எப்படி?

வட சென்னையில் தொடர் செயின் பறிப்பு கொள்ளையில் ஈடுபட்டு வந்தவரை போலிஸார் கைது செய்தனர்.

ஒரு வருடமாக டிமிக்கி கொடுத்த செயின் பறிப்பு கொள்ளையன்...  போலிஸார் பொறிவைத்துப் பிடித்தது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வட சென்னைக்கு உட்பட்ட ஆர்.கே.நகர், திருவொற்றியூர், புது வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக செயின் பறிப்பு உள்ளிட்ட கொள்ளை சம்பவங்கள் குறித்து போலிஸாருக்கு புகார் வந்துகொண்டிருந்தன.

இந்த தொடர் கொள்ளை குறித்து போலிஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் கொள்ளை, திருட்டு நடந்த இடங்களிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை போலிஸார் ஆய்வு செய்தனர்.

இதில், ஒரே நபர்தான் அனைத்து பகுதிகளிலும் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததை போலிஸார் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த நபர் ராம்குமார் என்பது தெரியவந்தது. ஒரு வருடமாகத் தலைமறைவாக இருந்த ராம்குமாரை போலிஸார் கைது செய்தனர்.

கடந்த ஒரு வருடமாக சிக்காமலிருந்த கொள்ளையனை போலிஸார் கைது செய்ததை அடுத்து காவல்துறை துணை ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் கொள்ளையனிடமிருந்து மீட்கப்பட்ட செயின், செல்போன் உள்ளிட்ட பொருட்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவும் போலிஸார் முயற்சி எடுத்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories