தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சி தேர்தல் : தி.மு.க நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை !

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தி.மு.க நிர்வாகிகளுடன் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் : தி.மு.க நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தி.மு.க சார்பில் ஒவ்வொரு மாவட்டத்தின் நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

உள்ளாட்சித் தேர்தலின் போது விடுப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி , வேலூர் , ராணிப்பேட்டை , திருப்பத்தூர் , திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக , தி.மு.க நிர்வாகிகளுடன் தி.மு.க தலைவரும் ,முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 9 மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் , மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், எம்.எல்.ஏ, எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, துணை பொதுசெயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா ஆகியோர் பங்கேற்று உள்ளனர்.

காலையில் திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கும், பிற்பகலில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்புத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுடன் ஆலோசனை நடைபெறவுள்ளது.

banner

Related Stories

Related Stories