தமிழ்நாடு

திருநம்பியாக மாறிய பெண்கள்.. வெற்றிகரமாக முடிந்த பால்மாற்று அறுவை சிகிச்சை - ராஜாஜி மருத்துவர்கள் சாதனை!

மதுரை அரசு மருத்துவமனையில் முதல்முறையாக திரு நம்பிகளுக்கான பால்மாற்று அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாகச் செய்துள்ளனர்.

திருநம்பியாக மாறிய பெண்கள்.. வெற்றிகரமாக முடிந்த பால்மாற்று அறுவை சிகிச்சை - ராஜாஜி மருத்துவர்கள் சாதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரை அரசு மருத்துவமனையில் திருநர் சமூகத்தினருக்கான பன்னோக்கு சிறப்பு மருத்துவப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் ஏராளமான திருநங்கைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக திரு நம்பிகளுக்கான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் நடந்து முடிந்துள்ளது. திருநெல்வேலி மற்றும் மதுரையைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண்கள் இருவர், தாம் திரு நம்பிகள் என்பதைக் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பே உணர்ந்துள்ளனர்.

பிறகு இதற்காக அறுவை சிசிக்சை செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளனர். இவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை கேட்டுள்ளனர். இதையடுத்து இவர்களுக்குக் கடந்த ஒரு வருடங்கலாக உளவியல் ஆலேசானையுடன், ஹார்மோன் சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர்.

இதையடுத்து இவர்களுக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளனர். பின்னர் மகப்பேறு மருத்துவத்துறை, சிறுநீரக அறுவை சிகிச்சைத்துறை, மயக்கவியல் துறை, மனநல ஆலோசனைத்துறை என அனைத்து துறைகளும் இணைந்து இருவருக்கும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து திருநம்பிகளாக மாற்றியுள்ளனர்.

திருநம்பியாக மாறிய பெண்கள்.. வெற்றிகரமாக முடிந்த பால்மாற்று அறுவை சிகிச்சை - ராஜாஜி மருத்துவர்கள் சாதனை!

தற்போது, அறுவை சிகிச்சை முடிந்து இருவரும் மனதளவிலும், உடலளவிலும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவக்குழு தெரிவித்துள்ளது. தென் தமிழ்நாட்டில் முதல் முறையாக இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறுவை சிகிச்சை குறித்து மருத்துவக்குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஸ்ரீதர்,”இதுவரை 37 திருநங்கை -திருநம்பிகள் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு முந்தைய உளவியல் மற்றும் ஹார்மோன் சிகிச்சையில் உள்ளனர். 10 பேர் அறுவை சிகிச்சைக்குத் தயாராக உள்ளனர்.

வரும் காலங்களில் செயற்கை மார்பகம் பொருத்துதல், செயற்கை ஆணுறுப்பு பொருத்துதல், குரல் மாற்றும் அறுவை சிகிச்சை, லேசர் மூலம் தேவையற்ற முடி நீக்கும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. திருநம்பி, திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவப் பிரிவு வியாழன்தோறும் புறநோயாளிகள் பிரிவு செயல்படும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories