தமிழ்நாடு

“பொதுச் சொத்துக்களை விற்பது தேச நலனுக்கு எதிரானது” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு !

மக்கள் நலன் கருதி இயங்கி வரக்கூடிய பொதுத் துறை நிறுவனங்களை விற்பதோ, குத்தகைக்கு விடுவதோ தேச நலனுக்கு உகந்தது அல்ல என்பது நம்முடைய கருத்து என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“பொதுச் சொத்துக்களை விற்பது தேச நலனுக்கு எதிரானது” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பொதுச் சொத்துக்களைத் தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு : -

“ பேரவைத் தலைவர் அவர்களே, பொதுத் துறை நிறுவனங்கள் பிரச்சினை குறித்த நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றி, அதற்கு மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் அவர்கள் விளக்கம் தந்திருக்கிறார்கள். எனவே, நானும் அதுகுறித்து ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.

நம் நாட்டினுடைய பொதுத் துறை நிறுவனங்கள், நம் அனைவருடைய பொதுச் சொத்தாகும். நமது நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பிற்கும் சிறு குறு தொழில்களின் ஆணிவேராக விளங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கக்கூடிய பெருந்தொழில் நிறுவனங்கள் அவை என்பது எல்லோருக்கும் தெரியும். இலாப நோக்கம் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல், மக்கள் நலன் கருதி இயங்கி வரக்கூடிய பொதுத் துறை நிறுவனங்களை விற்பதோ, குத்தகைக்கு விடுவதோ தேச நலனுக்கு உகந்தது அல்ல என்பது நம்முடைய கருத்து.

எனவே, ஒன்றிய அரசினுடைய பொதுச்சொத்துக்களைத் தனியார்மயமாக்கும் போக்கினை எதிர்க்கக்கூடிய வகையிலே, பிரதமர் அவர்களுக்கு நான் இதைச் சுட்டிக்காட்டி, நம்முடைய எதிர்ப்பைத் தெரிவிக்கக்கூடிய வகையில் கடிதம் எழுதவிருக்கிறேன் என்பதை இந்த அவைக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories