தமிழ்நாடு

BiggBoss வெற்றியாளர் திடீர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்: பாலிவுட்டில் தொடரும் பிரபலங்களின் மரணம்

இந்தியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியின் 13வது போட்டியின் வெற்றியாளர் சித்தார்த் சுல்கா, மாரமடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BiggBoss வெற்றியாளர் திடீர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்: பாலிவுட்டில் தொடரும் பிரபலங்களின் மரணம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியின் 13வது போட்டியின் வெற்றியாளர் சித்தார்த் சுல்கா இன்று மாரமடைப்பால் உயிரிழந்துள்ளார். சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக்பாஸ் 13வது சீசனில் கலந்துக் கொண்டவர் சித்தார்த் சுல்கா. அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும் விளையாடி ரசிகர்கள் மனதில் இடத்தை பிடித்தவர் சித்தார்த்.

இந்த நிகழ்ச்சியில் மூலம் பல படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆகி நடித்து வந்தார் சித்தார்த். இந்நிலையில், 40 வயதாகும் சித்தார்த்துக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்படுள்ளது. இதனையத்து சித்தார்த் குடும்பத்தினர் அவரை மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடல் உறவினர்களிடையே ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories