தமிழ்நாடு

தவறவிட்ட பணப்பை.. 15 நிமிடத்தில் மீட்ட சைதாப்பேட்டை போலிஸ்: நெகிழ்ச்சியடைந்த உரிமையாளர்!

தவறவிட்ட பணப் பையை 15 நிமிடத்தில் மீட்டு போலிஸார் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

தவறவிட்ட பணப்பை.. 15 நிமிடத்தில் மீட்ட சைதாப்பேட்டை போலிஸ்: நெகிழ்ச்சியடைந்த உரிமையாளர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சர்வேஸ்வரன். இவர் சொந்தமான நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார். நிறுவனத்தின் பணி ஒன்றிற்காக சர்வேஸ்வரன் நேற்று சென்னை வந்துள்ளார்.

பின்னர் வேலைகள் முடித்து விட்டு இரவு சைதாப்பேட்டை ரயில் நிலையம் எதிரே உள்ள உணவகத்தில் உணவருந்தியுள்ளார். பிறகு அங்கிருந்து காரில் சேலம் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

கார் உளுந்தூர்பேட்டையைக் கடந்து சென்றபோதுதான் சர்வேஸ்வரனுக்குத் தான் கொண்டு வந்த பையை உணவகத்திலேயே விட்டு வந்தது நினைவிற்கு வந்துள்ளது. இதனால் பதட்டம் அடைந்த அவர், இணையத்தில் சைதாப்பேட்டை காவல்நிலையத்தின் எண்ணைத் தேடிக் கண்டுபிடித்து தொடர்பு கொண்டுள்ளார்

பின்னர், போலிஸாரிடம் நடந்த விவரத்தை சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதையடுத்து சைதாப்பேட்டை போலிஸார் உணவகத்திற்கு விரைந்து சென்றனர். பிறகு உணவக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். உணவகத்தில் சர்வேஸ்வரன் விட்டுச் சென்ற இடத்திலேயே அவரின் பை இருந்தது.

இதை மீட்ட போலிஸார் இந்த தகவலை சர்வேஸ்வரனுக்கு தெரியபடுத்தினர். இதையடுத்து இன்று அதிகாலை சைதாப்பேட்டை காவல்நிலையம் வந்த சர்வேஸ்வரன் பையிலிருந்த உடைமைகளின் விவரங்களைத் தெரிவித்தார்.

இதனை உறுதிபடுத்திய போலிஸார் அந்த பையை சர்வேஸ்வரனிடம் ஒப்படைத்தனர். அதில், ரூ.74,110 மற்றும் விலை உயர்ந்த ஆப்பிள் டேப் இருந்தன. போலிஸார் பையை மீட்டதில் மகிழச்சியடைந் சர்வேஸ்வரன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இது குறித்து சர்வேஸ்வரன் கூறுகையில், "தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தகவல் சொன்ன 15 நிமிடத்திலேயே போலிஸார் பையை மீட்பார்கள் என்பதை நான் நினைத்துப் பார்க்கவில்லை. யாரோ ஒரு காவலர் செய்யும் தவறுக்கு மக்கள் மத்தியில் எதிர்மறையான எண்ணம் உருவாகி உள்ளது. ஆனால் உண்மையில் காவலர்கள் நமது நண்பர்களே" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories