தமிழ்நாடு

“சேலத்தில் பால்கோவா தயாரிப்பு.. தஞ்சையில் கால்நடை தீவன உற்பத்தி” : அமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்!

பால் உற்பத்தியாளர்களுக்கு மின்னணு வழியாக பணப்பட்டுவாடா செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.

“சேலத்தில் பால்கோவா தயாரிப்பு.. தஞ்சையில் கால்நடை தீவன உற்பத்தி” : அமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வோண்மை, கால்நடை, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

பால்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், இணைய வழியில் பால் அட்டைகள் விற்பனை செய்யப்படும் என்றும் துபாய், அபுதாபி, கத்தார், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஆவின் பால் விற்பனைக்கு 4 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்படவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பாதாம் பவுடர், வெண்ணெய், நெய், கோவா, நறுமண பால் ஆகியவற்றின் விற்பனை விலையை நிர்ணயம் செய்து நீண்ட காலமானதாலும் தற்போது உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாலும் இந்தப் பொருட்களின் விலையை மாற்றி அமைப்பது அவசியமாகிறது என்று கூறியுள்ளார்.

2021-22ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 15 வரை சென்னையில் பெருநகர பால் விற்பனை சராசரியாக நாள் ஒன்றுக்கு 13.59 லட்சம் லிட்டராக உள்ளது என்றும் 2021-22ஆம் ஆண்டில் 15 லட்சம் லிட்டராக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், 50 மெட்ரிக் டன் திறன் கொண்ட புதிய கால்நடை தீவன ஆலை விருதுநகரில் விரைவில் நிறுவப்படும் என்றும் தீவிர சந்தைப்படுத்துதல் முயற்சிகளின் விளைவாக ஐஸ்கிரீம் விற்பனை நாள் ஒன்றுக்கு 6,000 லிட்டரில் இருந்து 10 ஆயிரம் லிட்டர் என்ற இலக்கை அடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

பால்வளத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளாவன:

பாலின் தரத்தை மேம்படுத்த பால் கேன்களை குளிர்விக்கும் 40 இயந்திரங்கள் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களுக்கு வழங்கப்படும்.

பால் உற்பத்தியாளர் நலன் கருதி தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை ரூ.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்!

அம்பத்தூரில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் பிரிவு, சேலம் அம்மாபாளையத்தில் பால்பவுடர் தயாரிக்கும் பிரிவு ரூ.51.52 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

சேலம் கூட்டுறவு பால் பண்ணையில் இனிப்பு இல்லதாக பால்கோவா தயாரிக்கும் அலகு ரூ.8 கோடியில் நிறுவப்படும்.

பால் உற்பத்தியாளர்களுக்கு மாதந்தோறும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு தீர்வு காணப்படும். புதிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் உருவாக்க ஆய்வு மேற்கொள்ளப்படும்.

ஆவின் நிறுவனத்தில் மேலாளர் வரையிலான பணி இடங்களுக்கு, அரசு ஆணை பெற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்!

banner

Related Stories

Related Stories