தமிழ்நாடு

பொய்ச் செய்தி பரப்பிய செல்லூர் ராஜூ முகத்தில் கரிபூசிய பென்னி குக் குடும்பத்தினர்!

மதுரையில் அமைய உள்ள கலைஞர் நூலக கட்டடம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு பென்னிகுக் பேரன், பேத்திகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

பொய்ச் செய்தி பரப்பிய செல்லூர் ராஜூ முகத்தில் கரிபூசிய பென்னி குக் குடும்பத்தினர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரை நத்தம் சாலையில் 70 கோடி மதிப்பில், 2 லட்சம் சதுர அடி பரப்பளவில், எட்டு அடுக்கில் பிரம்மாண்டமாக கலைஞர் நூலகம் அமைப்பதற்கு தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டு அதற்குரிய பணிகள் நடைபெறத் தொடங்கிய நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக் வாழ்ந்த இடத்தில் நூலகம் கட்டுவதாக சர்ச்சையை எழுப்பினர்.

ஆனால் மாவட்ட நிர்வாகம் தரப்பில் மாவட்ட ஆட்சியர் அணிஷ் சேகர், 1911இல் பென்னிகுக் மறைந்தார். ஆனால் 1912ல் இந்த கட்டிடம் கட்டப்பட்டது என்றும் இங்கு பென்னி குக் வாழ்ந்ததில்லை என விளக்கம் அளித்திருந்தார்.

எனினும் சட்டமன்றத்திலும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் இதுகுறித்து கேள்வி எழுப்பிய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.கவினர் தவறான பிரச்சாரத்தை செய்வதைச் சுட்டிக்காட்டி, ஆதாரம் இருந்தால் நிச்சயமாக அதை மாற்றத்தயாராக இருக்கிறோம் என்றார்.

அதிமுகவினரின் இந்த பொய் பிரச்சாரத்திற்கு பென்னி குக் பேரன்கள் டயானா கிப் மற்றும் டாம் கிப் ஆகியோர் முற்றுப்புள்ளிவைத்துள்ளனர். கலைஞர் நூலகம் அமைவது குறித்தா வீடியோ ஒன்றையும் இவர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோவில், இந்த சர்ச்சை தேவையற்றது. இந்த நூலகம் கட்டுவதற்கு கென்னி குக் குடும்பத்தார் யாரும் எந்த எதர்ப்பும் தெரிவிக்கவில்லை. எங்கள் தாத்தா மதுரையின் வளர்ச்சிக்கா பாடுபட்டவர். இந்த பகுதியை முழுவதையும் அவர் மிகவும் விரும்பினார்.

இதன் வளர்ச்சிக்காகவே பெரியாறு அணையை முழுவமையான ஈடுபாட்டுன் கட்டினார். இந்த நூலகம் அமைய வேண்டும். இதற்கு எங்கள் குடும்பம் ழுமையாக உறுதுணையாக இருக்கும். கலைஞர் நூலகத்திற்கு நாங்கள் லண்டனில் இருந்து இயன்றால் புத்தகங்களை பரிசளிப்போம்" என தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories