தமிழ்நாடு

கேரளாவில் இருந்து எந்த வழியாக வந்தாலும் தப்ப முடியாது - கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற சுகாதாரத்துறை ஆணை!

அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படுவதை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் இருந்து எந்த வழியாக வந்தாலும் தப்ப முடியாது - கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற சுகாதாரத்துறை ஆணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் களுக்கும் சுற்றறிக்கை மூலம் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போதுள்ள கூடுதல் தளர்வுகளை கருத்தில் கொண்டு அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளில் அரசின் வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் ஹோட்டல்களில் முறையாக 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல, திருமணம், பிறந்த நாள், இறுதி சடங்கு, போன்ற விழாக்கள், அலுவலகம் மற்றும் வேலை இடம் தொடர்பான செயல்பாடுகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடங்கள், முக்கிய கடை வீதிகள், சாலையோர கடைகள், பேருந்துகள், ரயில் நிலையங்கள் ஆகிய இடங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என்றும், அவற்றை கட்டாயம் பின்பற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகம் வசிக்கும் மற்றும் கூடும் இடங்களில் தடுப்பூசி செலுத்தும் இலக்கை அதிகப்படுத்தி அதனை செயல்படுத்த வேண்டும் என்றும், கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இருந்து வருபவர்களை கட்டாயம் கண்காணிக்க வேண்டும். மேலும் வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு 100% கட்டாயம் தடுப்பூசி என்கிற அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

கேரளாவில் இருந்து எந்த வழியாக வந்தாலும் தப்ப முடியாது - கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற சுகாதாரத்துறை ஆணை!

மாவட்டத்தில் தொற்று அதிகம் பாதித்துள்ள பகுதிகளை கண்டறிந்து, தொற்று பரவாத வகையில் தனிமைப்படுத்துதல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், மேலும் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். மாவட்ட மருத்துவ அதிகாரிகள், மருத்துவ இயக்குனர்கள், காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் சமூக நலத்துறை அனைவரும் ஒன்றிணைந்து தொற்று பரவாத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

அண்டை மாநிலமான கேரளாவில் தொற்று பாதிப்பு உள்ள காரணத்தால் நம் மாநிலத்திலும் தொற்று பரவாத வகையில் காய்ச்சல் முகாம்கள் அமைத்தல், நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவற்றை விரைவாக செய்ய வேண்டும்

அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், கட்டாயம் தடுப்பூசி என்கிற அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுகின்ற பணிகளை முடுக்கி விட வேண்டும். இந்நிலையில் யாரெல்லாம் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்கள் என்பது தொடர்பான விவரங்கள் அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் உள்ளது. அதன்படி இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ள தகுதி உள்ளவர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்தவேண்டும்.

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகைக்கு பிறகாக தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே அது நம் மாநிலத்தில் பரவாத வகையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படுவதை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories