தமிழ்நாடு

“எனக்கு ஆண்மை இல்லை” : சிவசங்கர் பாபா பரபரப்பு வாக்குமூலம் - பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்!

தான் ஆண்மையற்றவர் என சிவசங்கர் பாபா வாக்குமூலம் கொடுத்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

“எனக்கு ஆண்மை இல்லை” : சிவசங்கர் பாபா பரபரப்பு வாக்குமூலம் - பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிவசங்கர் பாபா, சி.பி.சி.ஐ.டி போலிஸாரால் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சி.பி.சி.ஐ.டி போலிஸாரின் விசாரணையின்போது, தான் ஆண்மையற்றவர் என சிவசங்கர் பாபா வாக்குமூலம் கொடுத்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஆண்மை இல்லாத தான் எப்படி இதுபோன்ற பாலியல் தொந்தரவுகளில் ஈடுபட முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் சிவசங்கர். இதே காரணத்தைக் கூறி நீதிமன்றத்தில் ஜாமின் மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சிவசங்கர் பாபவிற்க்கு ஒரு மகன் மற்றும் மகள் அமெரிக்காவில் வசித்து வருவதாக குறிப்பிட்டதை நீதிபதிகள் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ளனர்.

மகன் மற்றும் மகள் உள்ளபோது தாங்கள் எப்படி ஆண்மையற்றவர் என குறிப்பிடுகிறீர்கள் என நீதிபதிகள் அவருடைய ஜாமின் மனுவை நிராகரித்தனர்.

பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலமான நிலையில் வழக்கில் இருந்து தப்பிக்கவே சிவசங்கர் பாபா ஆண்மையற்றவர் என கூறியுள்ளாரா எனச் சந்தேகம் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories