தமிழ்நாடு

மூட்டை மூட்டையாக ரூ.20.50 லட்சம் குட்கா பதுக்கல்; கைதான பாஜக நிர்வாகி மீது பாய்ந்தது குண்டாஸ்!

ஆத்தூர் அருகே குட்கா பதுக்கி வைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பாஜக பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

மூட்டை மூட்டையாக ரூ.20.50 லட்சம் குட்கா பதுக்கல்; கைதான பாஜக நிர்வாகி மீது பாய்ந்தது குண்டாஸ்!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி பகுதியில் ஜூலை 24ந்தேதி தம்மம்பட்டி போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோபால் என்பவரது தோட்டத்தில் ரூ20.50 லட்சம் மதிப்புள்ள ஒன்றை டன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மூட்டை மூட்டையாக ரூ.20.50 லட்சம் குட்கா பதுக்கல்; கைதான பாஜக நிர்வாகி மீது பாய்ந்தது குண்டாஸ்!

விசாரணையில், பாஜக நகர வர்த்தகர் அணி செயலாளராக உள்ள தம்மம்பட்டி நடுவீதி பகுதியைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகன் பிரகாஷ் (45). இவர் பெங்களூருவில்இருந்து குட்காவை வாங்கி வந்து பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இவர் மீது வழக்குப்பதிவு செய்த தம்மம்பட்டி போலீஸார் பிரகாஷை கைது செய்தனர்.

இந்நிலையில் தற்போது பிரகாஷ் சேலம் மத்திய சிறையில் உள்ளார். இதையடுத்து அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் பரிந்துரையின்படி மாவட்டஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டார்.

banner

Related Stories

Related Stories