தமிழ்நாடு

’அம்மாகிட்ட பேசனும்’ - வடிவேலு பட பாணியில் செல்போன் கேட்ட இருவர் ; சென்னையில் நடந்த பகீர் சம்பவம்!

சென்னை குரோம்பேட்டையில் அம்மாவிடம் பேச செல்போன் வேண்டும் என்று பரிதாபமாக கேட்டு வாங்கி ஏமாற்றியதுடன் கத்தியை காட்டி மிரட்டி இருசக்கர வாகனத்தையும் வழிப்பறி செய்த இருவர் கைது

’அம்மாகிட்ட பேசனும்’ - வடிவேலு பட பாணியில் செல்போன் கேட்ட இருவர் ; சென்னையில் நடந்த பகீர் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லோகேஷ்(32), எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 19ம் தேதி பணி நிமித்தமாக அக்கீஸ்வரர் காலனிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது நாகல்கேணி அண்ணா சாலையில் உள்ள போலீஸ் பூத் அருகே வந்த போது இருவர் வழிமறித்து தனது அம்மாவிடம் பேச வேண்டும் கொஞ்சம் செல்போன் வேண்டும் என கேட்க லோகேசும் தாயிடம் தானே பேச கேட்கிறார் என கருதி செல்போனை பேச கொடுத்துள்ளார்.

செல்போனை வாங்கியவுடன் ஒருவர் அப்படியே நடந்து செல்ல ஆரம்பித்திருக்கிறார். ஒருவர் லோகேஷிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். சிறிது நேரத்தில் கத்தியை காட்டி மிரட்டி இருசக்கர வாகனத்தையும் பிடிங்கிக் கொண்டு இருவரும் தப்பிச் சென்றனர்.

’அம்மாகிட்ட பேசனும்’ - வடிவேலு பட பாணியில் செல்போன் கேட்ட இருவர் ; சென்னையில் நடந்த பகீர் சம்பவம்!

சம்பவம் தொடர்பாக சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் பம்மல் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் என்பது தெரியவந்தது. அதனடிப்படையில் ஏஜாஸ் (27), மற்றும் ஜெயசூர்யா (21), என இருவரையும் கைது செய்தனர்.

இதில் ஏஜாஸ் மீது ஏற்கனவே செல்போன் திருட்டு வழக்கு உள்ளது தெரியவந்தது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories