தமிழ்நாடு

ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயற்சி... மாஃபா பாண்டியராஜனின் ஆதரவாளர் மீது போலிஸில் புகார்!

10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அ.தி.மு.க முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர் அபகரிக்க முயற்சிப்பதாக காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயற்சி... மாஃபா பாண்டியராஜனின் ஆதரவாளர் மீது போலிஸில் புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடுத்த ஆவடியைச் சேர்ந்தவர் அபிஷேக். இவருக்குச் சொந்தமாக பருத்திப்பட்டு கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையில் அபிஷேக் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், மாஃபா பாண்டியராஜனின் ஆதரவாளர் உட்பட 30க்கும் மேற்பட்ட நபர்கள் அபிஷேக்கிற்குச் சொந்தமான நிலத்தில் அத்துமீறி நுழைந்து இது எங்களுக்குச் சொந்தமான இடம் எனக் கூறி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையடுத்து அபிஷேக் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், "எனக்குச் சொந்தமான நிலத்தை நான்கு பேர் அபகரிக்க முயற்சிக்கிறார்கள். கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டி வருகிறார்கள்.

மேலும் இரண்டு கிரவுண்ட் நிலத்தைக் கொடுத்தால் பிரச்சனை முடித்துக்கொள்வோம். இல்லையென்றால் எதுவேண்டுமானாலும் நடக்கும்” என கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் ஆதரவாளர்கள் யுவராஜ் மற்றும் மனோகர், பா.ம.க நகரத் தலைவர் ஆனந்தன் ஆகியோர் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories