தமிழ்நாடு

“மன்னிக்கவே முடியாது” : யூ-டியூபர் பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை உறுதி செய்தது அறிவுரைக்கழகம்!

பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதி செய்தது.

“மன்னிக்கவே முடியாது” : யூ-டியூபர் பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை உறுதி செய்தது அறிவுரைக்கழகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படும் பப்ஜி கேம் குறித்து யூ-டியூபில் ஆபாசமாக பேசி பணம் பறித்ததாக பப்ஜி மதன் என்றவர் மீது சைபர் கிரைம் போலிஸில் புகார்கள் குவிந்தன.

இதனையடுத்து தலைமறைவாக இருந்த பப்ஜி மதனை கடந்த மாதம் தருமபுரி அருகே சுற்றி வளைத்து போலிஸார் கைது செய்தனர். பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.

இதனையெடுத்து, சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி ஜூலை 6ஆம் தேதி பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பப்ஜி மதன் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் நீதிபதிகள் முன்னிலையில் ஆஜராகி, தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யுமாறு வேண்டினார்.

இந்நிலையில் இன்று (ஆக.21) பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டம் செல்லும் என்று அறிவுரைக் கழகம் உறுதி செய்தது.

இதற்கிடையே பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலிஸார் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

- உதயா

banner

Related Stories

Related Stories