தமிழ்நாடு

“மோடியும் பெட்ரோலிய அமைச்சரும் நம்ம முதல்வருக்கு நன்றி சொல்லணும்”: புள்ளிவிவரங்களை அடுக்கிய நிதியமைச்சர்!

“பிரதமர் மோடியும், ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்” என நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

“மோடியும் பெட்ரோலிய அமைச்சரும் நம்ம முதல்வருக்கு நன்றி சொல்லணும்”: புள்ளிவிவரங்களை அடுக்கிய நிதியமைச்சர்!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 13ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 14ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 4 நாட்களாக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இன்று பட்ஜெட் மீதான பொது விவாதத்திற்கு பதிலுரை வழங்கிப் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “மாநில வரியால் கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றி தகவல் கிடைப்பது கடினம். கடந்த 13 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, பெட்ரோல் மீதான வரி 3 ரூபாய் குறைக்கப்பட்டது.

அன்றைய தினம் முதல் கிடைக்கக்கூடிய பலன் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 13ஆம் தேதி தமிழகத்தில் பெட்ரோல் விற்பனை 9 லட்சத்து 18 ஆயிரத்து 800 கிலோ லிட்டராக இருந்தது.

அது 14, 15, 16, 17 ஆகிய தேதிகளில் 10 லட்சத்து 31 ஆயிரத்து 500 கிலோ லிட்டராக விற்பனை அதிகரித்தது. தற்போது 11 லட்சத்து 28 ஆயிரம் கிலோ லிட்டராக அதிகரித்துள்ளது.

பெட்ரோல் விலை குறைக்கப்பட்டதால் பொதுமக்கள் நேரடியாக பயனடைந்துள்ளனர். பெட்ரோல் போட்டுக்கொண்டு மக்கள் பயணம் மேற்கொண்டு பணிகளைச் செய்கின்றனர்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்ததன் மூலம் நாள் ஒன்றுக்கு 11.29 லட்சம் லிட்டர் பெட்ரோல் விற்பனை அதிகரித்துள்ளது, இதே நிலை நீடித்தால் நாள் ஒன்றுக்கு ஒன்றிய அரசுக்கு ஒன்றுக்கு 3.55 கோடி வருமானம் கிடைக்கும், ஆண்டுக்கு 1,200 கோடி ஒன்றிய அரசுக்கு இதன் மூலம் வருமானம் கிடைக்கும்.

எனவே பிரதமர் நரேந்திர மோடியும், ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், நந்தனத்தில் உள்ள நிதித்துறை கட்டிடம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழிகாட்டி பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை எனும் பெயரால் அழைக்கப்படும் என்று அறிவித்தார்.

தொடர்ந்து, ஒன்றரை ஆண்டுகள் கழித்து பள்ளிகளை திறப்பதால் மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல் ஏற்படும். அதனை சரிசெய்யும் நோக்கில் 200 கோடி ரூபாய் செலவில் ‘கற்பித்தல் வாசித்தல் இயக்கம்’ மூலம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என அறிவித்தார்.

banner

Related Stories

Related Stories