தமிழ்நாடு

வீட்டுக்கே சென்று பாடம் நடத்தியதோடு Tab-ம் வாங்கி கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியை.. காஞ்சியில் நெகிழ்ச்சி!

கிராமப் பகுதிகளில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு வீட்டிற்கு நேரில் சென்று பாடம் நடத்தி சொந்த செலவில் Tab மற்றும் பெண் டிரைவ்கள் வழங்கியுள்ளார் அரசு பள்ளி ஆசிரியை.

வீட்டுக்கே சென்று பாடம் நடத்தியதோடு Tab-ம் வாங்கி கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியை.. காஞ்சியில் நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த சோகண்டி பகுதியை சேர்ந்தவர் கணித பட்டதாரி ஆசிரியை யுவராணி. இவர் திருப்பெருமந்தூர் அடுத்த மாத்தூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகின்றார்.

ஆங்கில வழி கல்வி கற்கும் பத்தாம் வகுப்பு கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி கணித பாட ஆசிரியை யுவராணி அவர்கள் வசிக்கும் வீடுகளுக்குச் சென்று சமூக இடைவெளியை கடைப்பிடித்து மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாடம் நடத்தி வருகிறார்.

திருப்பெருமந்தூர் அடுத்த மாத்தூர், வல்லம், வல்லக்கோட்டை ஆகிய பல கிராமங்களுக்கு தனது இருசக்கர வாகனத்தில் மாணவர்களின் வீட்டுக்கு நேரில் சென்று கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இலவசமாக பாடம் நடத்தி வருகின்றார்.

வீட்டுக்கே சென்று பாடம் நடத்தியதோடு Tab-ம் வாங்கி கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியை.. காஞ்சியில் நெகிழ்ச்சி!

பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவ மாணவிகளுக்கு தன்னுடைய சொந்த செலவில் ஆன்லைன் மூலம் கல்வி கற்க காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் திருப்பெரும்புதூர் வட்டார கல்வி அலுவலர் முன்னிலையில் லெனோவா டேப் மற்றும் கல்வி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் படங்களை பதிவேற்றம் செய்து கொள்ள பென்டிரைவ் களையும் அளித்து உதவினார்.

ஆசிரியை யுவராணி கூறுகையில், மாணவர்கள் பள்ளிக்கு வரமுடியாத காரணத்தினால் தமிழ், ஆங்கிலம் போன்ற பாடங்களை வீட்டில் இருந்து படித்துக்கொள்ளலாம். ஆனால் கணிதம் பாடம் மாணவர்களுக்கு கடினம் என்பதால் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டியும் கொரோனா தொற்று காலத்தில் மாணவர்களின் நலன் கருதி பெற்றோர்கள் தலைமை ஆசிரியர் மாவட்ட கல்வி அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மாணவர்கள் எளிதில் கல்வி கற்க இந்த பணிகளை ஆற்ற முடிகிறது என்று ஆசிரியை யுவராணி கூறுகிறார்.

மாணவர்கள் கூறுகையில், பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து படித்து தேர்வில் தேர்ச்சி பெறுவோமா என்பது சந்தேகம்தான். சுட்டு போட்டாலும் எங்களுக்கு கணிதம் வரவே வராது. ஆனால் எங்கள் கணித ஆசிரியை வீட்டிற்கு வந்து நேரடியாக பாடம் நடத்துவது மிகவும் எளிதாகவும் புரியும் வகையிலும் இருப்பதால் எப்போது தேர்வு வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். ஆசிரியை யுவராணியின் செயலை கிராமப்பகுதி மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கல்வி அதிகாரிகளும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories