தமிழ்நாடு

”பட்ஜெட் 2021: தமிழ்நாடு மாடல்தான் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணம்” - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பாராட்டு

பிரச்சினைகளை அடையாளம் கண்டதன் மூலம் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மற்ற மாநிலங்களுக்கு ஒரு மாதிரியாகத் திகழ்கிறது என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

”பட்ஜெட் 2021: தமிழ்நாடு மாடல்தான் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணம்” - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பாராட்டு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்" ஆங்கில நாளேட்டின் நேற்றைய (16.08.2021) இதழில் "ஏன் தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை மற்றவர்களுக்கு ஒரு மாதிரியாக (மாடல்) உள்ளது" என்ற தலைப்பில் எழுதியுள்ள தலையங்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:-

"சமீபத்தில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை பிரபலமான ரஜினிகாந்த்தின் அலங்கார வார்த்தையான "நான் லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டாகத்தான் வருவேன்" என்பதை கடன் வாங்கியுள்ளது. இறுதியாக அது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாநிலத்திற்கு வந்தபோது, நிதிநிலை அறிக்கை ஏராளமான ஆச்சரியங்களை தூக்கி எறிந்தது. ஓர் இணைப்பான வேளாண்மை நிதிநிலை அறிக்கை மாநிலத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நிலையையும், வேதனைகள் நிரம்பிய வேளாண் சமூகத்தைப் பற்றியும் வெளிப்படுத்தியிருப்பது வழக்கத்திலிருந்து மாறுபட்ட முக்கியமான ஒன்றாகும்.

”பட்ஜெட் 2021: தமிழ்நாடு மாடல்தான் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணம்” - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பாராட்டு

எப்போதும் இல்லாத அளவுக்கு முதல் முறையாக வெளியிடப்பட்ட மாநிலத்தின் முதல் இணைய நிதிநிலை அறிக்கையாகும். இது அரசாங்கம் தொழில்நுட்ப ரீதியிலான தாள் இல்லாத ஆளுமைக்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பதற்கான முன்னுரை என்று புகழப்படுகிறது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாநிலத்தின் மோசமான நிதிகுறித்து ஏற்கனவே கடந்த வாரம் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தவர், தற்போதைக்கு தொற்று நோய் முடக்கக் காலத்தைக் காரணம் காட்டி வருவாய் ஓட்டத்தை அதிகப்படுத்துவதற்காக தனது திட்டங்களைத் தள்ளிவைக்க நேர்ந்துள்ளது. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுரையின்படி, நிதி அமைச்சர் பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்துள்ளார்.

இரண்டு சக்கர வாகன உரிமையாளர்களுக்கு உதவுவதற்கு இது செய்யப்பட்டுள்ளது. இது மாநில கருவூலத்தில் 1,160 கோடி செலவை ஏற்படுத்தும். தேர்தல் வாக்குறுதியான ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1000 நிதி உதவி வழங்குவது, அரசு முதன் முதலாக இந்தத் திட்டம் ஏழைகளுக்கு மட்டும்தான் என்று கூறியிருப்பதால் அதற்கு தகுதியானவர்களை அடையாளம் காண்பதற்கான அமைப்பு உருவாக்கப்படும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. தற்போதைய அரசு பயன்பெறுபவர்கள் பற்றிய போதுமான தகவல்கள் இல்லாதது நலத்திட்டங்களையும், சமூக மற்றும் பொருளாதார நீதியையும் சிறப்பான முறையில் அமல்படுத்துவதற்கான அரசின் திறமையை பாதிக்கிறது என்று நம்புகிறது.

முன்னேற்றப் பாதையில் செல்வதன் மூலம் அது மற்றொரு குவி மையப் பகுதிக்குச் செல்கிறது. திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் வருவாய் வீழ்ச்சியடைந்ததால் மாநிலம் விரிவுபடுத்தக் கூடிய பொதுமக்கள் கடனைத் தொடக்கலாம். வெள்ளை அறிக்கை கூறியது பொதுக்கடன் ஏற்கனவே மிக அதிகமாக ரூ.5,70,183 கோடியாக உயர்ந்து இருக்கும் நிலையில் 22ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை மதிப்பீடுகள் மாநிலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,63,976 கோடியாக இருக்கும்.

”பட்ஜெட் 2021: தமிழ்நாடு மாடல்தான் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணம்” - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பாராட்டு

ஆனால், திருத்தப்பட்ட மதிப்பீடுகள் மூலம் மாநிலத்தின் 22ஆம் ஆண்டுக்கான வருவாய் பற்றாக்குறை இன்னும் அதிகமாக ரூ.16,496 கோடியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது மேலும் மோசமான ஒரு நிலைமையைச் சுட்டிக் காட்டுகிறது. சுருக்கமான அளவில் மாநிலத்தின் நிதி நிலைமையை மீண்டும் சரியான நிலைமைக்கு கொண்டு வருவது தி.மு.க. அரசுக்கு மிக கடுமையான (ஹெர்குலியன்) பணியாக இருக்கும். ஆனால் அது பிரச்சினைகளை அடையாளம் கண்டு குறிப்பிடத்தக்க தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மற்ற மாநிலங்களால் பின்பற்றக் கூடிய ஒரு மாதிரி (மாடல்)யாக இருக்கும்.

இவ்வாறு "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்" ஆங்கில நாளேடு தனது தலையங்கத்தில் எழுதியுள்ளது.

banner

Related Stories

Related Stories