தமிழ்நாடு

“வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை” : பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து எக்காரணத்தைக் கொண்டும் பின்வாங்க மாட்டோம் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.

“வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை” : பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து எக்காரணத்தைக் கொண்டும் பின்வாங்க மாட்டோம் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கடந்த 13ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், பட்ஜெட் மீதான விவாதம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியதும், அ.தி.மு.க உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார், தி.மு.க அரசு இனியாவது வாக்குறுதிகளை நிறைவேற்றுமா எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து நாங்கள் பின்வாங்கியதாக பல கருத்துக்கள் பேசப்பட்டு வருகிறது.

100 நாட்களின் நிகழ்வுகளைம் நாங்கள் தெளிவாகச் சொல்லி இருக்கிறோம். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து எப்போதும் எந்தக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டோம்.

வெள்ளை அறிக்கையிலும் நிதிநிலை அறிக்கையிலும் தெரிவித்தது போல நகைக் கடன் ரத்து செய்வதிலும், பயிர்க்கடன் ரத்து செய்வதிலும் பல முறைகேடுகள் குளறுபடிகள் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நடந்துள்ளன. அதை சரிசெய்து விட்டு கண்டிப்பாக எங்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.” என உறுதிபடத் தெரிவித்தார்.

மேலும், “அ.தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதிகள் கடந்த முறை நிறைவேற்றப்பட்டதா? இலவச செல்போன், ஆவின் பால் 25 ரூபாய், ஏழை மக்களுக்கு அம்மா மினரல் வாட்டர், குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள், கோ-ஆப்டெக்ஸில் கூப்பன், அனைத்து பொது இடங்களிலும் வைஃபை, பட்டு ஜவுளி பூங்கா, சென்னை மோனோ ரயில் ஆகிய வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டதா?” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

banner

Related Stories

Related Stories