தமிழ்நாடு

காப்பீடு பணம் பெற்றுத் தருவதாக கூறி மூதாட்டியை ஏமாற்றி ரூ.2 கோடி அபேஸ்; டெல்லி கும்பல் பிடிபட்டது எப்படி?

காப்பீடு பணம் பெற்றுத் தருவதாக கூறி மூதாட்டியை ஏமாற்றி ரூ.2 கோடி அபேஸ்; டெல்லி கும்பல் பிடிபட்டது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை மந்தைவெளியை சேர்ந்த சுதாஸ்ரீதரன் என்பவரிடம் 2019ம் ஆண்டு செல்போனில் தொடர்ப கொண்ட மோசடி கும்பல் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி இறந்துபோன அவரின் கணவரின் இன்ஸ்யூரன்ஸ் பணம் நிலுவையில் இருப்பதாகவும் அதை பெற்று தருவதாக நம்ப வைத்து பல்வேறு காரணங்களை சொல்லி வெவ்வேறு வங்கி கணக்குகளில் ரூ.2.06 கோடி பணத்தை பெற்று ஏமாற்றிய வழக்கில் மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் கடந்த 31.03.2021 அன்று டெல்லியில் வசிக்கும் அமன்பிரசாத் உட்பட மேற்படி கும்பலை சேர்ந்த 6 நபர்களையும், 24.07.2021 அன்று சிம்ரன்ஜித் என்பவரையும் கைது செய்தனர்.

டெல்லியில் முகாமிட்டு தொடர்ந்து புலன் விசாரணை மேற்கொண்டு வரும் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையாளர் பிரபாகரன், ஆய்வாளர் புஷ்பராஜ், முருகேசன், உதவி ஆய்வாளர் பிரேம்குமார், தலைமை காவலர்கள் ஸ்டாலின், சுருளிந்தி, பெண் தலைமை காவலர்கள் நிஷா, மற்றும் வளர்மதி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் புகார்தாரர் சுதாஸ்ரீதரனை ஏமாற்றிய கும்பலை சேர்ந்த தலைமறைவாக இருந்த 1.அன்ஷிகா (எ) சிவானி சவுஹான் (எ) பிரியாசர்மா, 2. அமித்குமார் மற்றும் 2. அக்ஷத்குப்தா ஆகிய மூவரை கடந்த 12.08.2021 அன்று டெல்லியில் கைது செய்து, ரோகிணி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னைக்கு அழைத்து வந்து இன்று (15.08.2021) எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

புலன் விசாரணையில் மேற்படி அன்ஷிகா (எ) சிவானி சவுஹான் என்பவர் பிரியா சர்மா என்ற பெயரில் வங்கி கணக்குகள் துவக்கி அந்த கணக்குகளில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து புகார்தாரரை ஏமாற்றி பணம் பெற்றிருப்பதும் மேற்படி மோசடி முறையில் பெற்ற பணத்தை கொண்டு எதிரிகள் அமித்குமார், அஷத்குப்தா மற்றும் தலைமறைவாக உள்ள குற்றவாளி ரவிசர்மா ஆகியோர் போலியான பியர்ல் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் மூலம் உலர்கனிகள், முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற பொருட்களை மொத்த வியாபாரிகளிடம் பாதி பணத்தை கொடுத்து கொள்முதல் செய்து விற்பனை செய்ததுடன் மேற்படி வியாபாரிகளிடமும் மீதி பணத்தை தராமல் பல கோடி ரூபாய் வரை ஏமாற்றியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

செல்போனில் அறிகமுகமில்லாத நபர்கள் தொடர்பு கொண்டு இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவோ, கடன் ஏற்பாடு செய்து தருவதாகவோ, கடன் அட்டையின் வரம்பினை உயர்த்தி தருவதாகவோ, வெகுமதிகள் வந்திருப்பதாகவோ தெரிவித்து வங்கி கணக்கு விபரங்கள் கிரெடிட் டெபிட் கார்டு விவரங்கள் கோரினாலோ அல்லது பணம் செலுத்த சொன்னாலோ அவ்வாறு செய்யாமல் உஷராக இருக்குமாறு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories