தமிழ்நாடு

"தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் இன்று ஆறியது".. 51 வருட ஏக்கத்தை தீர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

1970ல் முத்தமிழறிஞர் கலைஞரால் கொண்டு வரப்பட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் தற்போது 51 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டுள்ளது.

"தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் இன்று ஆறியது".. 51 வருட ஏக்கத்தை தீர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் 5 தலித்கள் உள்பட வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

1970ல் முத்தமிழறிஞர் கலைஞரால் கொண்டு வரப்பட்ட இச்சட்டம் தற்போது 51 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டுள்ளது. இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சாதனை மகுடத்தில் சேர்ந்திருக்கும் வைரக்கல் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை கடந்த 1970ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். எனினும் பல்வேறு சட்டச் சிக்கல்கள் காரணமாக இந்த சட்டத்தை அப்போது நிறைவேற்ற முடியவில்லை. இது தந்தை பெரியாருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிய தந்தை பெரியார், “நம் கோயில்களுக்குப் போகிற எவரும் எந்தக் கோயிலுக்கு போவதானாலும் சாமி இருக்கிற அறைக்கு வெளியில் நின்றுதான் சாமி தரிசனம் செய்ய வேண்டியிருக்கிறது.

காரணம், நாம் கீழ் சாதிக்காரர்கள். நாம் தொட்டால், நெருங்கினால் சாமி தீட்டாகிவிடும். ஆதலால் எட்டி நிற்க வேண்டும்; வெளியில் நிற்கிறோம். எனவே இந்த இழிநிலை போக்கப்பட வேண்டாமா? என்பதுதான் நான் நமது மக்களுக்கு வைக்கும் விண்ணப்பம்” என 1973ஆம் ஆண்டு விடுதலை இதழில் எழுதினார்.

தந்தை பெரியார் மறைந்த பிறகு முத்தமிழறிஞர் கலைஞர், “பெரியாருக்கு எத்தனையோ விருப்பங்கள் உண்டு. சாதி பேதமற்ற சமுதாயம், மூட நம்பிக்கை ஒழிந்த சமுதாயம் இதையெல்லாம் காண வேண்டுமென்று பெரியார் ஆசைப்பட்டார்.

அவரது ஆசைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டன எனினும், இந்த ஆசை ஒன்றை நிறைவேற்ற முடியாமல் பெரியார் மறைந்துவிட்டார். இது பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்” எனக் குறிப்பிட்டார்.

"தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் இன்று ஆறியது".. 51 வருட ஏக்கத்தை தீர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கியுள்ளார். இதன்மூலம், 51 ஆண்டுகளுக்குப் பிறகு பெரியாரின் கனவையும் கலைஞரின் சட்டத்தையும் நிறைவேற்றியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

banner

Related Stories

Related Stories